22 August 2016


செப்'2-2016 

வேலைநிறுத்தப்போராட்ட விளக்கக் கூட்டம்


தோழர்களே !

          மத்திய தொழிற்சங்கங்கள் விடுத்த அறைகூவலுக்கிணங்க செப்’2 2016 அன்று நாடு முழுவதும் 20 கோடிக்கும் மேற்பட்ட ஊழியர்கள் மற்றும் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்து , குறைந்த பட்ச ஊதியத்தை 18000 ரூபாயாக உயர்த்து ,  தொழிலாளர் சட்டங்களை முறையாக அமுல்படுத்து , பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாத்திடு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

          நமது சங்கமும் , TEPU சங்கமும் நமது நிறுவனம் சார்ந்த கோரிக்கைகளான போனஸ் பார்முலாவை இறுதிசெய் மற்றும் 2014-15 & 2015-16ம் ஆண்டுகளுக்கான போனஸை வழங்கிடு , BSNL பங்குகளை விற்காதே , BSNL ஊழியர்களுக்கு 01.01.2017 முதலான ஊதிய திருத்த்த்திற்கான ஊதியக் கமிட்டியை அமைத்திடு மற்றும் BSNL CDA விதிகளில் ஊழியர்களை கட்டாய வேலை நீக்கம் செய்ய பரிந்துரைக்கும் விதி 55(II)b சரத்தை நீக்கிடு போன்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கூட்டாக அறைகூவல் விடுத்துள்ளது.

          அதன்படி நமது மாவட்டத்தில் பின்வரும் தேதிகளில் போராட்ட விளக்கக் கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இடம்
தேதி
பங்கேற்கும் தோழர்கள்
அருப்புக்கோட்டை
24.08.2016
புதன்
தோழர் G.ராகவன் , மாவட்டத் தலைவர்
தோழர்K.முருகேசன்,மாநில துணைச்செயலர், மதுரை
தோழர் D.ரமேஷ்,மாநிலத்துணைச் செயலர்
ராஜபாளையம்
25.08.2016 வியாழன்
தோழர்சண்முகம்,மாநிலதுணைச்செயலர் , தென்காசி
தோழர் P.மலைச்செல்வன், வட்ட உதவித் தலைவர்
திருவில்லிபுத்தூர்
26.08.2016 வெள்ளி
தோழர் D.ரமேஷ்,மாநிலத்துணைச் செயலர்
தோழர்K.சந்தானம்,மாவட்டச்சங்கசிறப்புஅழைப்பாளர்.
சிவகாசி
29.08.2016 திங்கள்
தோழர் D.ரமேஷ்,மாநிலத்துணைச் செயலர்
தோழர் S.மன்னன் மார்த்தாண்டம் , மாவட்ட உதவித் தலைவர்
விருதுநகர்
30.08.2016
தோழர் D.ரமேஷ்,மாநிலத்துணைச் செயலர்
தோழர் M.ராமதாஸ் , மாவட்ட உதவித் தலைவர்
தோழர் K.ஜெயசீலன், மாவட்டச் செயலர் TMTCLU


தோழமையுள்ள

N.ராம்சேகர்                    A.ஜேசுராஜா
           மாவட்டச் செயலர்                     மாவட்டச் செயலர்

                    NFTE                                                   TEPU