21 January 2017


அமெரிக்காவின் 45வது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றுள்ளார். நெறிமுறை சார்ந்தும் ஒதுக்கப்பட்டவர்களின் நலமேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளித்து ஆட்சி செய்ய வேண்டுமென போப் பிரான்சிஸ் தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இத்தருணத்தில் அமெரிக்க இந்திய உறவு குறித்தும் நாம் கவலைப்படவேண்டியுள்ளது. முந்தைய ஒபாமா ஆட்சிகாலத்தில் இந்தியா அமெரிக்காவின் கைப்பிள்ளையாக இருந்தது குறிப்பிடத்தகுந்தது.