26 September 2018


ஊதிய மாற்ற ஊழியர் தரப்பு விவாதக் கூட்டம்

ஊதிய மாற்றம் சம்பந்தமாக இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட முன்னேற்றங்கள் குறித்து விவாதிக்க ஊழியர் தரப்பு நேற்று 25.09.2018 அன்று டெல்லியில் நமது NFTE சங்க அலுவலகத்தில் கூடியது.

கூட்டத்தில் NFTE சங்கத்தின் சார்பாக தோழர் சந்தேஸ்வர்சிங் , தோழர் இஸ்லாம் அகமது , தோழர் K.S.சேஷாத்ரி , தோழர் A.ராஜமெளி ஆகியோரும்,  BSNLEU சங்கத்தின் சார்பாக தோழர் P.அபிமன்யு ,  தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி , தோழர் அனிமேஷ் மித்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர்.

கூட்டம் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள் குறித்து விரிவாக விவாதித்தது. முக்கியமாக நிர்வாகம் பரிந்துரைத்த ஊதிய விகிதங்கள் விரிவாக ஆராயப்பட்டன. எந்த ஊதிய விகிதங்களிலெல்லாம் தேக்க நிலை உருவாகும் என கருதுகிறோமோ அந்த ஊதிய விகிதங்களில் எல்லாம் தேக்க நிலை ஏற்படுகிறது என்பதற்கான சான்று ஏதும் இதுவரை கீழ்மட்ட ஊழியர்களிடமிருந்து கிடைக்கப்பெறவில்லை என கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும் ஊதிய விகிதங்கள் விரைவாக இறுதி செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்திடப்பட்டு DOT இலாகாவின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட வேண்டும் என கூட்டம் கருதியது.

படிகள் திருத்தம் குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்கப்பட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்ப்பட்டது.

ஊதிய விகிதங்களை இறுதிசெய்வதற்கு மட்டும் தான் DOT இலாகாவின் ஒப்புதல் தேவை என்றும் படிகள் திருத்தத்தை பொறுத்தமட்டில் அத்தகைய ஒப்புதல் தேவையில்லை எனவும் , படிகள் குறித்து BSNL நிர்வாகமே முடிவு செய்ய அதிகாரம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

தோழர்களே!

ஊதிய மாற்ற கூட்டுக் குழுவின் அடுத்த கூட்டம் நாளை மறுதினம் 28.09.2018 அன்று நடைபெறவுள்ளது.

நம்பிக்கையுடன் காத்திருப்போம்... உறுதியான ஊதிய மாற்றம் நோக்கி...