4 December 2018


செய்திகள்


மாவட்டச் செயலர்கள் கூட்டம் 11/12/2018 அன்று காலை 09.30 மணிக்கு சென்னை கிரீம்ஸ் ரோடு NFTE சங்க அலுவலகத்தில் மாநிலத்தலைவர் தோழர் P.காமராஜ் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது. 


DOT இலாகா வெளியிட்ட 03.12.2018 அன்று BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் DOT செயலர் ஆகியோரிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை விவரக்குறிப்புகளை அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்களுக்கு BSNL நிர்வாகம் இன்று 04.12.2018 அன்று அனுப்பிவைத்துள்ளது. 


03.12.2018 முதலான காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்பட்டதாக முறைப்படி BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் DOT செயலருக்கும் , BSNL CMDக்கும் தங்களது 04.12.2018 தேதியிட்ட கடிதம் மூலம் தெரிவித்துள்ளனர். 


ஜனவரி 2019 முதல் பஞ்சப்படி 2.9% முதல் 3.4% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


BSNL நிறுவனத்தில் 01.11.2018 அன்றைய தேதியில் 1,72,165 ஊழியர்கள் பணியில் உள்ளதாகவும் அதில் ஊழியர்கள் 1,24,720 பேரும் அதிகாரிகள் 47,445 பேரும் பணியில் உள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு BSNL நிர்வாகம் பதில் அளித்துள்ளது. மேலும் அந்த பதிலில் 2018-19ம் ஆண்டில் 15,741 பேரும் , 2019-20ம் ஆண்டில் 17,142 பேரும், 2020-21ம் ஆண்டில் 16,426 பேரும் மற்றும் 2021-22ம் ஆண்டில் 16,158 பேரும் பணி ஓய்வு அடையப் போகிறார்கள் என தெரிவித்துள்ளது. 



காலிப்பணியிடங்கள் இல்லை எனக் கூறி கருணை அடிப்படையிலான பணி நியமனம் மறுக்கப்படுவதாக மத்திய சங்கத்திற்கு புகார்கள் வந்ததின் அடிப்படையில் அத்தகையோர்களுக்கு பணி நியமனம் கிடைக்கும் வரை அவர்களது பெயர்களை காத்திருப்போர் பட்டியலில் இருந்து நீக்கக்கூடாது என மத்திய சங்கம் Director (HR) அவர்களுக்கு இன்று 04.12.2018 அன்று கடிதம் எழுதியுள்ளது. 


JTO பதவிக்கான 50% நிர்வாக ஒதுக்கீட்டின் அடிப்படையிலான போட்டித்தேர்வுக்கான மாநில வாரியான , இனம் வாரியான 2016-17ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை மாநில நிர்வாகங்கள் அளித்த விபரங்களின் அடிப்படையில் BSNL நிர்வாகம் இன்று 04.12.2018 அன்று வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட தகவல்களை மேலும் ஆராய்ந்து குளறுபடி ஏதுமிருப்பின் திருத்தப்பட்ட காலிப்பணியிடங்களை 08.12.2018க்குள் தெரிவிக்க வேண்டுமென கார்ப்பரேட் அலுவலகம் மாநில நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

தமிழ்மாநில காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை

OC / OBC – 176 | SC – 56 | ST – 55 | TOTAL – 287