28 February 2019

பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி - தள்ளி வைப்பு...

நமது மூன்று நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து நமது கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தும் விதமாக மார்ச் -3 2019 அன்று பிரதமர் அலுவலகம் நோக்கி பேரணி நடத்த அனைத்து சங்க கூட்டமைப்பு அறைகூவல் விடுத்தது.

தற்போது எல்லையில் நிலவும் போர் பதட்டமான சூழ்நிலையினை முன்னிட்டு அப்போராட்டத்தை ஒத்தி வைப்பதாக அனைத்து சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.