11 March 2019

உண்ணாவிரதப் போராட்டம்  ஒத்திவைக்கப்பட்டது...

07/03/2019 அன்று CMDயுடன் அனைத்து சங்க கூட்டமைப்புத் தலைவர்களின் சந்திப்பின் போது சம்பள பட்டுவாடா காலதாமதம் குறித்த தங்களது கடும் எதிர்ப்பை பதிவு செய்த நிலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான அறிவிப்பையும் வெளியிட்டிருந்தனர் இந்நிலையில் .

CMDயுடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில்...


பிப்ரவரி மாத சம்பளம் இந்த வார இறுதிக்குள் பட்டுவாடா செய்யப்படும்…எனவும்


பிப்ரவரி மாதம் வரை பிடித்தம் செய்யப்பட்ட GPF, EPF, ஆயுள்காப்பீடு, வங்கிக்கடன்  மற்றும்  இதரவகைப் பிடித்தங்கள் அனைத்தும் உடனடியாக செலுத்தப்படும்… எனவும்


போராட்டத்தின் காரணமாக பழிவாங்கும் நடவடிக்கை இருக்காது... எனவும் 


அதிகாரிகள் மீது FR-17A விதிகளின்படி நடவடிக்கை இருக்காது... எனவும் 

CMD கூட்டமைப்பின் தலைவர்களிடம் உறுதியளித்தார் அதன் அடிப்படையில் 12/03/2019 அன்று நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அனைத்து சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.