நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்...
BSNL நிறுவனத்தினை புத்தாக்கம் செய்யும் விசயத்தில் IIT அகமதாபாத் அளித்த அறிக்கையின் அடிப்படையில் முந்தைய மாவட்ட அளவிலான நிர்வாகம் என்பது மாவட்டங்களை இணைத்து வணிகப்பகுதிகளாக இந்தியா முழுமையும் உருவாக்கப்பட்டன. அப்படி உருவாக்கப்பட்ட வணிகப்பகுதிகள் பூகோள ரீதியாக உருவாக்கப்படாமல் வருவாய் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. அதன்படி நமது விருதுநகர் மாவட்டம் தூத்துக்குடி மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. மேலும் திருநெல்வேலி, நாகர்கோவில் மாவட்டங்களிலும் பிரச்சினைகள் எழுந்தன. அதனால் தென்பகுதி மாவட்டங்களான விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் பகுதிகளில் வணிகப்பகுதி மறுசீரமைப்புக் கோரிக்கைகளை நமது NFTE மாவட்டச் சங்கங்கள் தீவிரமாக எழுப்பின.
விருதுநகர் மாவட்டம் மதுரைக்கு அருகில் இருப்பதால் மதுரையோடு இணைக்க வேண்டும் என விருதுநகர் மாவட்டச் சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இது குறித்து மாநிலச்சங்கத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருந்தோம் மேலும் 8வது தேர்தல் சுற்றுப்பிரச்சாரத்தின் போது நமது சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் சந்தேஸ்வர் சிங் அவர்களிடம் நேரிடையாக மனு அளித்திருந்தோம்.
திருநெல்வேலி மாவட்டம் தனி வணிகப்பகுதியாக இருக்க வேண்டும் என நெல்லை மாவட்டச் சங்கம் கோரிக்கை வைத்தது.
நாகர்கோவில் தனிமாவட்டமாக திகழ வேண்டுமென நாகர்கோவில் மாவட்டச் சங்கம் கோரிக்கை வைத்தது.
நமது வணிகப்பகுதி மறுசீரமைப்பு கோரிக்கைகளை தமிழ் மாநிலச் சங்கம் மத்திய சங்கத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றது. நமது மாநிலச் சங்கத்தின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக இன்று நமது வணிகப்பகுதி மறுசீரமைப்புக் கோரிக்கைகள் வெற்றிபெற்றுள்ளன.
இன்று 27.08.2020 அன்று BSNL நிர்வாகம் வணிகப்பகுதிகள் மறுசீரமைப்பு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் குறித்து ஒரு உத்தரவினை வெளியிட்டுள்ளது.
வருடத்திற்கு 30 கோடி வருவாய் ஈட்டல் என்ற அடிப்படையில் தற்போதைய 198 வணிகப்பகுதிகள் மறுசீரமைப்பின் மூலம் 158 வணிகப்பகுதிகளாக மாற்றம் பெற்றுள்ளன.
வருவாய் அடிப்படையில் Very Large BA , Large BA, Medium BA , Small BA என நான்கு விதமாக பிரிக்கப்பட்டுள்ளன.
நமது விருதுநகர் மாவட்டத்தை மதுரை மாவட்டத்துடன் இணைக்க வேண்டும் என்ற நமது நியாமான கோரிக்கையை வெற்றிகரமாக்கிய தமிழ்மாநிலச் சங்கத்திற்கும், மத்திய சங்கத்திற்கும், விருதுநகர் மாவட்ட NFTE சங்கம் தனது நெஞ்சார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.
தெற்கின் குரல் வடக்கிற்கு எட்டாது என்ற அரசியல் கூற்று இன்று பொய்யாகியுள்ளது. தென்பகுதி பிரச்சினை மீது உரிய நேரத்தில் மத்திய நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்த்து வைத்த மாநிலச் சங்க , மத்திய சங்கத் தோழர்களுக்கு விருதுநகர் மாவட்ட NFTE சங்கங்கத்தின் சார்பாக மீண்டும் ஒருமுறை எங்களது இதயங்கனிந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்...