சந்தாப் பிடித்தம் புதிய நடைமுறை
தொழிற்சங்கத்தில்
சந்தாப் பிடித்தம் செய்வதற்கு கணக்கதிகாரியிடம் விண்ணப்பம் செய்யும் முறை ஒழிக்கப்படுகிறது.
இனி ERP மூலமாக விண்ணப்பம் செய்யலாம். ஊழியர்களுக்கு விருப்பம் தெரிவிக்கும் சாளரம்
ஒரு மாதத்திற்கு திறந்திருக்கும். அந்த காலகட்டத்துக்குள் ஒரு சங்கத்தில் இருந்து மற்றொரு
சங்கத்திற்கு மாறவோ அல்லது எந்த ஒரு தொழிற்சங்கத்திலும் சேரவில்லை என்பது குறித்தும்
விருப்பம் தெரிவிக்கலாம். ஒருமுறை விண்ணப்பித்து விட்டால் அதுவே இறுதியானது.
புதிதாக சங்கத்தில் இணைபவர்களுக்கு இந்த காலக்கெடு தேவையில்லை, இருப்பினும் பல்வேறு எதிர்பாராத காரணங்களுக்காகவோ, உள்விவகாரங்களில் ஒரு ஊழியரிடமிருந்து சந்தாப்பிடித்தத்தை தடைசெய்யவோ அல்லது சங்கத்திலிருந்து வெளியேற்றும் பொருட்டு எந்த ஒரு தொழிற்சங்கமோ அசோசியோசனோ கேட்டுக் கொண்டால் சம்பந்தப்பட்ட ஊழியரின் சந்தாப் பிடித்தத்தை நிறுத்திவைக்கும் உரிமை நிர்வாகத்திற்கு உள்ளது. ஆனால் இது அரிதாகவே நடக்கும்.
இந்த
புதிய நடைமுறைக்காக விண்ணப்பத்தில் மேலதிகாரி மற்றும் சம்பந்தப்பட்ட சங்கச் செயலரின்
கையொப்பம் பெறுதல் மற்றும் பிடித்தம் செய்ய வேண்டிய சந்தாத்தொகையினை ஊழியர்களே விண்ணப்பத்தில்
தெரிவிக்கும் முறை ஆகியவை வழக்கொழிக்கப்படுகிறது.
இனி
ஒவ்வொரு மாதமும் சந்தாத் தொகை பிடித்தம் குறித்த ஊழியரின் பெயர் , HR NO, கேடர், எந்த
மாவட்டம், எந்த மாநிலம், எந்த மாதத்திற்கு பிடித்தம் செய்யப்பட்டுள்ளது, எந்த மாதம்
வரை சங்க கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது
ஆகிய தகவல்கள் சம்பந்தப்பட்ட சங்கத்திற்கு அறிக்கை வாயிலாக தெரிவிக்கப்படும்.
இதுகுறித்து
தங்களது கருத்துக்களை 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டுமென தொழிற்சங்கங்களை நிர்வாகம்
கேட்டுக் கொண்டுள்ளது.