26 October 2020

 விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் 

விருதுநகர் மாவட்ட AUAB சந்திப்பு



இன்று விருதுநகர் மாவட்ட AUAB சார்பாக விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் திரு மாணிக்கம் தாஹுர் அவர்களிடம் BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யக்கோரி, BSNL புத்தாக்கத்திட்டத்தை முமுமையாக அமல்படுத்தக் கோரி மத்திய அரசிடம் வலியுறுத்துமாறு வேண்டுகோள் அளித்து மனு அளிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பில் BSNLEU சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் சமுத்திரக்கனி, தோழர் முத்துச்சாமி ஆகியோரும் NFTE சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் சம்பத்குமார், மாவட்ட உதவிச் செயலர் தோழர் ரமேஷ் ஆகியோரும் , AIBSNLEA சங்கத்தின் சார்பாக மாவட்டச் செயலர் தோழர் ஜேசுராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

திரு மாணிக்கம் தாஹூர் , MP அவர்கள் உங்களது கோரிக்கையை நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேசுவேன் என்றும் தனிப்பட்ட முறையில் இலாகா அமைச்சருக்கு கடிதம் எழுதுவதாகவும் தோழர்களிடம் தெரிவித்தார்.