19 November 2020


மத்திய தொழிற்சங்கங்கள் , 2020, நவம்பர் 26 அன்று பொது வேலை நிறுத்தத்தை நடத்த அறைகூவல் விடுத்துள்ளன. BSNL நிறுவனத்தில் உள்ள BSNLEU, NFTE (BSNL), NUBSNLW (FNTO), TEPU, BSNL MS, SNATTA, BSNL ATM மற்றும் BSNLOA ஆகிய 8 சங்கங்களும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் முழுமையாக கலந்து கொள்வது என முடிவெடுத்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள் வைத்துள்ள 7 அம்ச கோரிக்கைகளோடு, BSNL தொடர்பான 10 அம்ச கோரிக்கைகளையும் நமது சங்கங்கள் முன்வைத்துள்ளன. 

ஆகவே தோழர்களே மத்திய தொழிற்சங்கங்களின் அறைகூவலை ஏற்று அறிவிக்கப்பட்டுள்ள நவம்பர் 26 வேலை நிறுத்தப் போராட்டத்தை பெரு வெற்றி அடையச் செய்வது நமது அனைவரின் முன்னுள்ள பெருங்கடமை.


தோழர்களே! 
பங்கேற்போம்... அனைவரையும் பங்கேற்க வைப்போம்...
போராட்டத்தை வெற்றிகரமாக்குவோம்...