14 November 2018

அனைத்துசங்க அறைகூவல்
கோரிக்கை நிறைவேற்ற வலியுறுத்தி மனு அளிப்பு...




னைத்து சங்க கூட்டமைப்பின் அறைகூவலின் அடிப்படையில் இன்று 14.11.2018 அன்று விருதுநகர் மாவட்டத்தில் NFTE , SEWA , TEPU , FNTO சங்கங்களின் சார்பில் ஊதியமாற்றம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , ஓய்வூதியப் பங்களிப்பு வழங்குவதில் அரசு விதிகள் அமுலாக்கம் மற்றும் ஓய்வூதிய திருத்தம் ஆகியவற்றில் மத்திய அமைச்சர் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தும் வகையில் மாவட்ட நிர்வாக்திடம் மனு அளிக்கப்பட்டது. 

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மனுவை திரு.S.செந்தில்குமார் , AGM(Admn.) அவர்கள் பெற்றுக்கொண்டார்.

முன்னதாக விருதுநகர் பொதுமேலாளர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை விளக்க வாயில் கூட்டம் நடைபெற்றது. 

கூட்டத்தில் ;

தோழர் P.சம்பத்குமார்,  பொறுப்பு மாவட்டச்செயலர் , NFTE , 
தோழர் N.ராம்சேகர் , மாவட்டச்செயலர், NFTE ,
தோழர் G.ராஜகுரு , மாவட்டச்செயலர், SEWA
தோழர் R.பிரேம் குமார்,  மாநில துணைச்செயலர் ,SEWA , 
தோழர் V.கணேசன் , மாவட்டச்செயலர், TEPU  தோழர்S.பாண்டுரெங்கன், மாவட்டச்செயலர், FNTO  
தோழர் M.ராஜேந்திரன் ,மாவட்டத்தலைவர், NFTE , 
தோழர் P.பாஸ்கரன் , மாவட்ட உதவிச் செயலர், NFTE , 
தோழர் S.வெங்கடப்பன் ,மாவட்டப் பொருளாளர் NFTE உட்பட தோழர்கள் கலந்து கொண்டனர்

தோழர் D.ரமேஷ், மாநில துணைச்செயலர், NFTE  கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.