14 November 2018

நவீன இந்தியாவின் சிற்பி 
நேரு அவர்களின் 129வது பிறந்த தினம்
குழந்தைகள் தினம்


நாடு சுதந்திரம் அடைந்த கையோடு காந்தி மறைந்து விட்ட நிலையில் புதிய நாட்டின் கட்டமைப்பில் மக்களுடைய மதிப்பீடுகளை வடிவமைப்பதில் மதச்சார்பின்மையை திரும்பத் திரும்ப வலியுறுத்தியவர் நேரு.

உலகம் முழுவதும் ஒரே குடும்பம் எனும் பார்வை நேருவுக்கு இருந்தது. அமெரிக்கா , ரஷ்யா என உலக நாடுகள் இரண்டுபட்டு நிற்க அணிசேரா கொள்கையை முன்னிறுத்தி உலக நாடுகளை ஒருங்கிணைத்தவர் நேரு.

ஜனநாயகத்தை பெரிதும் மதித்தவர். கட்சியிலும் மக்களிடத்திலும் இருந்த அபாரமான செல்வாக்கைப் பயன்படுத்தி ஒரு சர்வாதிகாரியாகிருக்கலாம் நேரு. ஆனால் எதிர்கட்சிகளே ஜனநாயகத்தின் அடிப்படை என்பதை ஆழமாக மதித்த அவர், கட்சிக்குள்ளும் வெளியிலும் எல்லோரும் தன்னை கேள்வி கேட்க அனுமதித்தார்.

சோஷலிசத்துடன் முதலாளித்துவத்தின் சாதகமான அம்சங்களையும் கலந்து கலப்புப் பொருளாதாரத்தை அறிமுகப்படுத்தினார். பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் தோன்ற அவரே வழிவகுத்தார். அவர் நிறுவிய தேசிய நிறுவனங்கள் அவர் காண விரும்பிய இந்தியாவுக்கான அடித்தளங்கள்.

குழந்தைகளை பெரிதும் நேசித்தவர் நேரு. ஆகவே தனது பிறந்த தினத்தை குழந்தைகள் தினமாக கொண்டாடினார்.

அன்னாரின் நினைவை எந்நாளும் போற்றுவோம்.