13 November 2018


ஊதிய மாற்றத்திற்கான BSNL  நிர்வாகத்தின் அறிக்கையை கூடுதல் விபரங்கள் கேட்டு
DOT இலாகா திருப்பி அனுப்பியுள்ளது...

BSNL  ஊழியர்களுக்கு மூன்றாவது ஊதிய மாற்றத்தை அமுலாக்குவது சம்பந்தமாக BSNL   நிர்வாகம் DOT இலாகாவிடம் அறிக்கை சமர்ப்பித்திருந்தது. அதன் மீது பல்வேறு விளக்கங்களைக் கோரி மீண்டும் BSNL   நிர்வாகத்திடமே திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக SNEA சங்கத்தின் மத்திய சங்க இணைய தளம் தகவல் தெரிவித்துள்ளது.

  • BSNL  நிறுவனத்தின் வருமானம் பெருமளவு குறைந்துள்ளது எனவும், 2016-17 மற்றும் 2017-18ம் வருடங்களை ஒப்பிடுகையில் 20% அளவு குறைந்துள்ளதாகவும் 2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டு வரையிலான காலத்தில் அது மேலும் உயர்ந்து 27.8% அளவுக்கு குறைந்துள்ளது.


  •  2017-18ம் ஆண்டில் BSNL  நிறுவனத்தின் வளர்ச்சி 4.8% அளவிற்கு இருக்கும் என கணிக்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அதன் வளர்ச்சி 14.8% அளவுக்கு குறைந்துள்ளது.


  • ஊழியர்களின் ஊதியச் செலவு நிருவனத்தின் வருவாயை ஒப்பிடுகையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. 2017-18ம் நிதியாண்டில் ஊதியச்செலவு அதன் வருவாயில் 65.7% ஆக இருந்தது. 2018-19ம் நிதியாண்டின் முதல் காலாண்டு வரையிலான காலத்தில் அது மேலும் உயர்ந்து 89% என்ற அளவை எட்டியுள்ளது.


  • 15சத ஊதிய நிர்ணயத்துடனான ஊதியமாற்றத்திற்கு வருடத்திற்கு 4303 கோடி ரூபாய் அதிக செலவாகும் ( ஓய்வூதியப் பங்களிப்பு அதிகபட்ச ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டுள்ளது ) மேலும் நிறுவனத்தின் செயல்பாடுகளினால் கிடைக்கும் வருவாய்க்கும் மேலாக அதிகரிக்கலாம் (ஓய்வூதியப் பங்களிப்பு ஊழியர்கள் வாங்கும் சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்பட்டால் கூட 2760 கோடி ரூபாய் கூடுதல் செலவு பிடிக்கும் )


  • ·  கூடுதல் வருவாயை எதிர்பார்த்து  BSNL 4G சேவையை துவக்க கடன் வாங்கவுள்ளது. அவ்வாறு கூடுதல் வருவாய் கிடைக்கும் பட்சத்தில் கடனை திருப்பிச்செலுத்த வேண்டும்.


  • · BSNL செலுத்திய அதிகப்படியான ஓய்வூதியப் பங்களிப்பு 2000 கோடியாக உள்ளது. ஆனால் ஊழியர்களின் நடப்பு சம்பளத்தின் அடிப்படையில் ஓய்வூதியப்பங்களிப்பு வழங்க அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அரசால் இன்னும் ஏற்றுக் கொள்ளப்படவில்லை.


  • ·   FTTH  சேவை மூலம் கூடுதல் வருவாயைப் பெற BSNL  நிறுவனம் உத்தேசித்து வருகிறது.


மேற்கண்ட காரணங்களின் அடிப்படையில் ஊதியமாற்றத்திற்கான சாதமான அறிக்கையை கூடுதல் விபரங்களுடன் அளிக்க DoT இலாகா BSNL நிர்வாகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.