12 July 2016

மாவட்டச் செயற்குழு கூட்டம்

           நமது சங்கத்தின் 6வது மாநாடு வெற்றிகரமாக முடிந்த நிலையில் புதிய நிர்வாகிகள் அடங்கிய மாவட்டச் செயற்குழுவின் முதல் கூட்டம் நேற்று 11.07.2016 அன்று விருதுநகர் மாவட்டச் சங்க அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் தோழர் ராகவன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.

        மாவட்டச் செயற்குழுவில் மாநிலமாநாடு , தலமட்டப்பிரச்சினைகள் , மாவட்டங்கள் இணைப்பு , ஒப்பந்த ஊழியர் சங்கம் உருவாக்குவது ஆகிய பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டன. 

         மாவட்டச் சங்க கணக்குவழக்குகள் மற்றும் மாவட்ட மாநாட்டு வரவு செலவு அறிக்கை ஆகியவை மாவட்டப் பொருளாளர் செல்வராஜ் அவர்களிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டது.

மாவட்டச் செயற்குழு கீழ்க்கண்ட முடிவுகளை எட்டியது :

  1. மாநில மாநாட்டு நிதியாக அனைத்து கிளைகளும் உறுப்பினர் ஒவ்வொருவரிடமும் ரூ.200/- நன்கொடை பெற்று மாவட்டச்சங்கத்திடம் கொடுப்பது.
  2. உறுப்பினர்கள் மாநில மாநாட்டில் சார்பாளர்களாக கலந்து கொள்வதில் கட்டுப்பாடு ஏதுமில்லை.
  3. சைக்கிள் அலவன்ஸ் மற்றும் வாசிங் அலவன்ஸ் பட்டுவாடாவில் ஏற்பட்டுள்ள குழப்பம் குறித்து நிர்வாகத்திற்கு கடிதம் எழுதுவது.
  4. மாநாடு நடத்தாத கிளைகள் உடனடியாக மாநாடு நடத்துவது.
  5. கவுன்சில் உறுப்பினர்களாக மாவட்டச் செயலர் ராம்சேகர் , மாவட்டத் தலைவர் ராகவன் , மாவட்ட உதவித்தலைவர் மன்னன் மார்த்தாண்டன் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
  6. சேமநலக் குழு உறுப்பினராக மாவட்ட உதவிச் செயலர் ரமேஷ் தொடர்ந்து நீடிப்பார்.
  7. பணிக்குழு உறுப்பினர்களாக தோழர் சம்பத்குமார் , தோழர் முத்துசாமி, தோழர் வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து செயல்படுவார்கள்.
  8. ஒப்பந்த ஊழியர் சங்கம் அமைக்கும் நடவடிக்கைக்கு மாவட்ட அமைப்புச் செயலர் தோழர் ராஜேந்திரன் அதன் தலைவராக இருந்து செயல்படுத்துவார்.