ஊதிய மாற்றக் கருத்தரங்கம்
01.01.2017 முதல் ஊதிய மாற்றம் பெற்றிட அனத்து பொதுத்துறை சங்கத்தலைவர்களை அழைத்து கருத்தரங்கம் நடத்திட நமது தமிழ் மாநிலச் சங்கம் திட்டமிட்டுள்ளது. தோழர்கள் அனைவரும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வகையில் மாநில நிர்வாகம் 22.11.2016 அன்று சிறப்பு விடுப்பு வழங்கியுள்ளது.
தோழர்களே ! தோழியர்களே நம்மில் பெரும்பான்மையோருக்கு இதுவே கடைசி சம்பள திருத்தம். ஆகவே சிறப்பான ஒரு ஊதிய ஒப்பந்தத்தை கட்டமைப்பது என நமது NFTE சங்கம் உறுதி கொண்டுள்ளது. சிறப்பான ஊதிய ஒப்பந்தம் கண்டிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கருத்தரங்கில் நாமும் பெருவாரியாக கலந்து கொண்டு கருத்தரங்கை சிறப்பிக்க வேண்டும்.
கிளைச் செயலர்கள் தங்களது கிளையிலிருந்து பங்கேற்கும் தோழர்களது எண்ணிக்கையை மாவட்டச் செயலரிடம் விரைந்து அளிக்க வேண்டுகிறோம்.