20 March 2017

TM தோழர்களின்  LONG STAY - 2017 மாற்றலுக்க்கான நமது மாவட்டச் சங்க பரிந்துரைகள்

06.03.2017 அன்று நடைபெற்ற நமது மாவட்டச் சங்க செயற்குழுவில் விவாதித்த கருத்துக்களின் அடிடைப்படையில் TM தோழர்களின் 2017ம் ஆண்டுக்கான  Long Stay  மாற்றல்களை அமுல்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களை கடிதம் வாயிலாக இன்று 20.03.2017 அன்று நிர்வாகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன ;

1.    2015ம் ஆண்டு மாற்றலில் சென்றவர்கள் மீண்டும் மாற்றல் கோரியிருந்தால் அவர்களுக்கு உடனடியாக மாற்றல் வழங்கப்படவேண்டும்.

2.  சங்க நிர்வாகிகளுக்கான சலுகையின் அடிப்படையில் திரு. P.செல்வராஜ் ,TM, வீரசோழன் மற்றும்  திரு.P.பாஸ்கரன் , TM பரளச்சி ஆகிய தோழர்கள் உடனடியாக விருதுநகருக்கு மாற்றப்படவேண்டும்

3.   ஏற்கனவே சொந்தவிருப்பத்தின் அடிப்படையில் LongStay மாற்றலில் சென்றவர்கள் தங்களது பணிக்காலத்தை( Tenure ) இறுதிசெய்தால் மட்டுமே அவர்களது விருப்ப மாற்றல் விண்ணப்பங்களை பரிசீலிக்க வேண்டும்.  

4.        Long stay  மாற்றல்கள் காலியிடங்கள் அறிவிக்கப்பட்டு Counselling  முறையில் நடைபெற வேண்டும்.

5.       ஊழியர் பற்றாக்குறையினால் , விருதுநகரில் பணிபுரியும் தோழர்கள் அருப்புக்கோட்டை விருதுநகருக்கு அருகில் உள்ள ஊர் என்பதன் அடிப்படையில் அருப்புக்கோட்டைப் பகுதிக்கு மாற்றல் செய்யப்படுகிறார்கள். அது போல சாத்தூரில் ஊழியர் பற்றாக்குறை ஏற்படும் போது சிவகாசியில் உள்ள ஊழியர்களை சாத்தூருக்கு மாற்றல் செய்யவேண்டும்.
         
6.     Longstay மாற்றலில் முன்வரிசையில் உள்ள ஊழியர்களின் விருப்ப மாற்றல்களை கண்டிப்பாக பரிசீலிக்க கூடாது.