9 January 2018



அனைத்து BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு
விருதுநகர் மாவட்டம் 

அனைத்து BSNL தொழிற்சங்கங்கள் சார்பாக 3வது ஊதியமாற்றம் மற்றும் டவர் நிறுவனம் அமைப்பதற்கு எதிர்ப்பு ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 12 & 13’2017ல் நடத்தப்பட்டது. மேற்படி நடவடிக்கைகளைப்பற்றி திட்டமிடுவதற்காக நேற்று 08.01.2018 நேற்று டெல்லியில் FNTO சங்க அலுலகத்தில் அனைத்து BSNL தொழிற்சங்கங்களின் கூட்டம் நடைபெற்றது. 

கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன

  • 30.01.2018 முதல் ஐந்துநாட்களுக்கு முழுநேர சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபடுவது.
  • 30.01.2018 முதல் காலவரையற்ற விதிப்படி வேலை செய்யும் போராட்டத்தில் ஈடுபடுவது.
  • 28.02.2018 அன்று சஞ்சார் பவன் நோக்கி மாபெரும் பேரணி நடத்துவது
  • ஒருவார காலத்திற்குள் தொலைதொடர்புதுறை அமைச்சர் , தொலைதொடர்புச்செயலர் மற்றும் CMD BSNL ஆகியோரைச் சந்தித்து நமது கோரிக்கைகளை வலியுறுத்துவது.
  • அரசின் டவர் நிறுவனம் அமைக்கும் முயற்சியைத் தடுப்பதற்கான சட்டரீதியான வழிவகைகளை ஆராய்வது
  • மத்திய தொழிற்ச்சங்கத்தலைவர்களை சந்தித்து நமது கோரிக்கைகளின் மீது அவர்களது ஆதரவினைக் கோருவது.
  • நடைபெறவுள்ள போராட்டங்களை வழிநடத்துவதற்காக BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA ஆகியசங்கங்களின் பொதுச் செயலர்களைக் கொண்டு குழு அமைப்பது.

தோழர்களே! தோழியர்களே!
தயார்படுவோம்! வெகுண்டெழுவோம்
!