9 January 2018

மத்திய சங்கச் செய்திகள்

BSNL நேரடி நியமன ஊழியர்களின் ஓய்வூதியப் பலன்களுக்கு BSNL நிறுவனத்தின் சார்பாக 3% வழங்க நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது. இதனை உயர்த்தி வழங்க வேண்டுமென தொழிற்ச்சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன. இதனடிப்படையில் 01.04.2017 முதல் அடிப்படைச்சம்பளத்துடன் பஞ்சப்படியோடு இணைத்து 5 சதவிகிதமாக உயர்த்தி வழங்க நேற்று 08.01.2018 அன்று BSNL நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. 


-------------------------------------------------------------------------------------------------------------------------

BSNL ஊழியர்களின் வெளிப்புறச்சிகிச்சைகான கட்டணத்தை ஈடு செய்ய 78.2 சத பஞ்சப்படியின் அடிப்படையில் முன்பிருந்த 25நாட்கள் என்பதை மாற்றி 23 நாட்களுக்கு மிகாமல் வழங்க நிர்வாகம் கடந்த வாரம் நிர்வாகம் ஒப்புதல் வழங்கியது, இது ஊழியர்கள் ஏற்கனவே 68.8 சதம் அடிப்படையில் பெற்றுவரும் தொகைக்கு குறைவாக பெறும் சூழ்நிலை ஏற்பட்டது. புதிய உத்தரவினால ஊழியர்களுக்கு ஏற்படும் இழப்பைச் சுட்டிக்காட்டி நமது மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியது. அதன் அடிப்படையில் நிர்வாகம் உத்தரவில் ஏற்பட்ட தவறை சரிசெய்து மீண்டும் 25நாட்களுக்கு மருத்துவக்கட்டணத்தை ஈடாக வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. திருத்த உத்தரவு விரைவில் வெளியாகும்.