12 February 2018

7வது மாவட்ட மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1.   போன் மெக்கானிக் தோழர்களின் Long Stay சுழல் மாற்றல் வழக்கம் போல் இரண்டு வருடங்களாகவே தொடரவேண்டும் என இம்மாநாடு வலியுறுத்துகிறது.

2.   BSNL வருவாயை மேம்படுத்தும் வகையில் NFTE விருதுநகர் மாவட்டச் சங்கம் சார்பாக மாதத்திற்கு ஒரு முறை ஒவ்வொரு துணைக்கோட்ட அளவில் மேளா நடத்திட இம்மாநாடு முடிவு செய்கிறது.

3.   அனைத்து வாடிக்கையாளர் சேவைமையங்களில் ஏற்படும் பில்லிங் சம்பந்தமான பிரச்சினைகளை கவனிப்பதற்காக ஒரு கணக்கதிகாரியை விருதுநகர் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பணியமர்த்திட வேண்டுமென மாநாடு கோருகிறது.

4.   டவர் கோபுரங்களுக்கென தனி நிறுவனம் அமைக்கும் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் திரும்பப்பெறப்பட வேண்டும். மேலும் மத்திய சங்கம் மேற்கொள்ளும் சட்டரீதியான நடவடிக்கைகளை மாநாடு வரவேற்கிறது.

5.   01.01.2017 முதலான BSNL ஊழியர்களின் ஊதிய மாற்றத்தை விரைவில் பெற்றுத்தர வேண்டுமென மத்திய சங்கத்தை இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது. அதற்கான அனைத்துப் போராட்டங்களிலும் விருதுநகர் மாவட்டச்சங்கம் முதன்மை மாவட்டச்சங்கமாக முன்னிற்கும்