13 June 2018


36வது தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்ட நிகழ்வுகள் 

36வது தேசிய கூட்டாலோசனைக் குழுக் கூட்டம் 12.06.2018 அன்று திருமதி T.சுஜாதா ரே, இயக்குநர்(மனிதவளம் மற்றும் நிதி) அவர்களது தலைமையில் நடைபெற்றது. GM(SR) அவர்கள் குழு உறுப்பினர்களை வரவேற்று பேசுகையில் பிரச்சினையான காலகட்டத்திலும் நாம் உணர்வு பூர்வமாக ஒன்றிணைந்துள்ளோம் எனவும் தேசிய குழு என்பது நமக்கான பிரச்சினைகளை இணைந்து பேசித்தீர்ப்பதற்கான ஒரு களமாகும் என்றார். 

திருமதி. சுஜாதா ரே தனது வரவேற்புரையில் குழுக் கூட்டத்தை காலக்கெடுவின் அடிப்படையில் நடத்த முடியாமைக்கு தனது வருத்தத்தை தெரிவித்தார். இரண்டு வருட காலங்களில் இரு முறை மட்டுமே கூடியுள்ளோம் என்றார். தற்போதைய சூழ்நிலையில் நமது நிறுவனத்தால் ஊழியர்களுக்கு ஆதரவாக முன்மாதிரியாக செயல்படுவதில் பெரும் கஷ்டம் உள்ளது. நாளுக்கு நாள் வருமானம் குறைந்து வருவது பெரும் நெருக்கடியாக உருவெடுத்துள்ளது. இத்தகைய கஷ்டமான சூழ்நிலையில் நிர்வாகமும், ஊழியர்களும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக இருக்கவேண்டும். ஊழியர்கள் நிலைமையை உணர்ந்துள்ளனர். கடந்த வருடத்தில் நமது வருமானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. ஊழியர்கள் தங்களை விருப்பத்தை கைவிடவேண்டியிருந்தது என்றார். 3வது ஊதிய மாற்றத்தை உறுதியாக பெறமுடியும் என்றார். Affordability சரத்திலிருந்து விலக்கு பெறுவதற்கான அமைச்சரவைக் குறிப்பை தயாரிப்பதில் DOT நிர்வாகம் முனைப்பாக உள்ளது எனவும் ஊதியமாற்றம் வருட இறுதிக்குள் கிடைத்துவிடும் என தான் நம்புவதாகவும், நிறுவனத்தின் வருமானம் குறையாமல் இருக்க வேண்டும் எனவும் கூறினார். அனைவரின் ஒத்துழைப்பினால் டவர் நிறுவனம் செயல்படுவது தள்ளிவைக்கப்பட்டிருக்கலாம் ஆனால் அதன் நன்மை தீமைகளை விவரித்துப் பேசாமல் இருக்க முடியாது என்றார். ஊழியர் தரப்புத் தலைவரான தோழர் சி சிங் பேசுகையில் ஊழியர்களுக்காக மேம்படுத்தப்பட்ட மொபைல் திட்டத்தை அறிவித்ததற்காக நன்றி தெரிவித்துக்கொண்டதோடு 7வது ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலான கேசுவல் ஊழியர்களின் ஊதிய மேம்பாடு , ஊழியர்களுக்கான புதிய மொபைல் சேவையை கொண்டு வருவதில் கார்ப்பரேட் அலுவலகம் எதிர்கொண்ட சவால்கள், கருணை அடிப்படையிலான பணி வழங்குவதில் அளிக்கும் 15 புள்ளிகளை ஊழியரின் மனைவிக்கு வழங்குவதற்கு பதிலாக அவரது குழுந்தைகளுக்கு நீட்டித்து பணியமர்த்துவது , முதுநிலை கணக்காயர்களை அதிகாரிகளாக தரம் உயர்த்துவது , டெலிகாம் டெக்னிசியன் கேடருக்கு வெளியிலிருந்து ஆளெடுப்பது, TT, JE, JAO & JTO கேடர்களுக்கான போட்டித் தேர்வுக்கான கால அட்டவணையை வெளியிடுவது ஆகிய கோரிக்கைகளை எழுப்பினார். 

ஊழியர்தரப்புச் செயலரான தோழர் அபிமன்யு தனது உரையில் புதிய மொபைல் திட்டத்திற்கு தனது நன்றியை தெரிவித்ததுடன் தேசியக்குழு முடிவுகள் அமுலாக்கப்படாமல் இருப்பது குறித்து தனது கவலையை வெளிப்படுத்தினார். நிர்வாகமும், ஊழியர்களும் டவர் நிறுவனத்தை செயல்படாமல் ஆக்குவதற்கு எத்தைகைய நடவடிக்கையானாலும் இறங்க தயாராக இருக்கவேண்டும் என கேட்டுக் கொண்டார். ஊதிய மாற்றத்திற்கான அமைச்சரவைக் குறிப்பு தயாரவதில் காலதாமதம் நிகழ்வதாக தான் கருதுவதாகவும், 5% ஓய்வூதியப் பலன்கள் போதாது எனவும், கேசுவல் ஊழியர்களின் ஊதியம் அதிகரிக்கப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஓய்வூதியர்களின் மருத்துவ வசதிக்கான முறையான உத்தரவு வெளியிடப்படவேண்டும் என்றார். நிலைக்குழு கூட்டம் இரண்டு வருடங்களில் ஒரே முறை மட்டும் கூடியுள்ளது என்றார். மேலும் மார்கெட்டிங்க் பகுதிகளில் பணிபுரியும் ஊழிய்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

இருதரப்பு ஊதியகமிட்டி அமைத்தல், போட்டித்தேர்வுக்கான காலஅட்டவணை வெளிடுதல் மேலும் மார்க்கெட்டிங் ஊழியர்களுக்கான் ஊக்கத்தொகை ஆகியவற்றிற்கான உத்தரவுகளை விரைந்து வெளியிட வேண்டுமென குழுவின் தலைவரை கேட்டுக்கொண்டார். மேலும் ஓய்வுபெற்றவர்களின் மருத்துவப்படி வழங்குவற்கான உத்தரவினை உடனடியாக வெளியிட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். 

குழுவின் உறுப்பினரான தோழர் இஸ்லாம் அகமது பேசுகையில் நிறுவனம் பெரும் நிதிச்சுமையில் இருக்கும் போது இயக்குநர் கூட்டத்தை டெல்லியில் நடத்தாமல் ஹைதராபாத்தில் அதுவும் ஐந்து நட்சத்திரக் ஹோட்டலில் நடத்துவது நிறுவனத்துக்கு நல்லதல்ல என்றார். மேலும் JAO கேடருக்கான ஆளெடுப்புவிதிகளை இறுதிசெய்தல், ஊழியர்களின் பதவி உயர்வுத் திட்டத்தில் உள்ள குறைகளை களைய முடியாததால் புதிய பதவி உயர்வுத் திட்டத்தை உருவாக்குதல் , டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை ஊழியர்களுக்கு நீட்டித்தல் ஆகிய கோரிக்கைகள் குறித்து உரையாற்றினார்.