14 June 2018


36வது தேசிய கூட்டாலோசனைக் குழு விவாதங்கள்

JE கேடருக்கான போட்டித்தேர்வில் கூடுதல் மதிப்பெண் வழங்குதல் மற்றும் தேர்வு விதிகளை தளர்த்துதல் :

விரிவான விவாதங்களுக்குப் பிறகு நிர்வாகம் இதுகுறித்து கவனிப்பதாகவும் முடிந்தவற்றை செய்து தருவதாகவும், மீண்டும் ஒரு போட்டித்தேர்வு விரைவில் நடத்தப்படும் எனக் கூறியது.

RTP ஊழியர்களின் பணிக்காலத்தை சீரமைத்தல் :

ஊழியர்களின் DOT கால பணிக்காலத்தை ஒழுங்குபடுத்துவதற்கான அனுமதியோ அதிகாரமோ  BSNL நிறுவனத்திற்கு தரப்படததால் விவகாரம் DOT இலாகாவுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஜம்மு & காஷ்மீர் , அஸ்ஸாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு Senior Office Associate  கேடருக்கு சிறப்பு ஆளெடுப்பு :

அனுமதிக்கப்பட்ட 26368 ஊழியர்களுக்கு 26323 ஊழியர்கள் பணியில் உள்ளதால் சிறப்பு ஆளெடுப்பு தேவையில்லை.

JEகேடருக்கான போட்டித்தேர்வினை எழுத்துத் தேர்வாக நடத்து :

ஊழியர்கள் கணினி பயிற்சிக்கு அனுப்பப்படுவார்கள்

மருத்துவப்படி வழங்குவதை 6மாத பரிட்சார்த்த காலத்தையும் தாண்டி நீடிப்பு செய்க :

மருத்துவப்படி வழங்குவதற்கான உத்தரவினை வெளியிட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆய்வுமாளிகைகளை ( IQs ) முறையாக பராமரித்தல் மற்றும் அறைகளை இணையம் மூலமாக ஒதுக்கீடு செய்க :

அறைகளை இணையம் மூலமாக ஒதுக்கீடு செய்யும் நிரலியை வடிவமைக்க ITPC கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அறைகளை முறையாகப் பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கருணை அடிப்படை பணியமர்த்தலுக்கான புதிய மதிப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்துக :

02.06.2016 தேதியிட்ட புதிய வழிகாட்டுதலின் படி காலிப்பணியிடங்களை 01.04.2018 முதல் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.



அமுல்படுத்தப்படாமல் நீடிக்கும் நிர்வாக கமிட்டியின் ஒப்புதலைப்பெற்ற ஊழியர் பிரச்சினைகள் :

1.   ஊழியர்களுக்கு பதவி உயர்வு திட்டத்தில் E1 சம்பள விகிதத்தை அமுலாக்கு.
2.   01.01.2017க்குப்பிறகு பணியமர்த்தப்பட்ட TTAக்களுக்கு வழங்கப்பட்டதைப்போல விடுபட்ட ஊழியர்களுக்கும் ஒரு கூடுதல் இன்கிரிமென்ட் வழங்கு.
3.   கேசுவல் ஊழியர்களுக்கும் கிராஜீட்டி வழங்குவதை அமுல்படுத்து

மேற்கண்ட பிரச்சினளுக்கு மாறிவரும் சூழ்நிலைகளுக்கேற்ப தீர்வு காண்பதாக நிர்வாகம் உறுதியளித்தது.

ஆந்திரா மற்றும் தெலுங்கான மாநிலங்களைப் பிரித்ததினால் ஏற்ப்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்க :

ஊழியர் தரப்பு மாற்றலுக்கான காலவரம்பை இரண்டு வருடங்களாக நிர்ணயிக்க வேண்டுமென கோரியது. நிர்வாகம் ஹைதராபாத் மற்றும் விஜயவாடா பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின் ஊழியர் சங்கங்களுடன் கலந்தாலோசித்து தீர்வு காண்பதாக கூறியது.
அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலங்களுக்கென தனி சர்வரை உருவாக்குக :

நடப்பில் உள்ள சிஸ்டம் மேம்படும் என நம்புவதாக நிர்வாகம் அறிவித்தது.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் கேசுவல் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சிறப்புச் சலுகையை நீட்டிப்பு செய்க :

ஊக்கத்தொகையினை பறிப்பதற்கான உத்தரவு ஏதும் வெளியிடப்படவில்லை.

BSNL CDA 2006 விதிகளில் விதி எண் 55(A)வினை நுழைத்திடுக :

முறையிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும் எனவும், மாநில மட்டத்தில் குழு அமைப்பது குறித்து ஆராயப்படும் எனவும் நிர்வாகம் கூறியது. ஊழியர் தரப்பு DOTயிலிருந்து BSNLல் இணைந்த ஊழியர்களுக்கு FR56(J) சரத்து ஒருபோதும் பொருந்தாது என கடுமையாக வலியுறுத்தியது.

Officiation Promotionல் JTO ஆக பதவி உயர்வு பெறும் JEக்களுயக்கு FR22(1)a (1) ன் பலன்களை வழங்கிடு :

       உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக Special Litigation Petition தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் தற்போது கோரிக்கையை பரிசீலிக்க இயலாது.

PGM மற்றும் CGM அலுவலகங்களில் உதவி மேலாளர் பதவிகளை உருவாக்கிடு :

       ஊழியர் தரப்பு Sr.TOA கேடர்களுக்காக உதவி மேலாளர் பதவிகளை உருவாக்க வேண்டும் என கோரியது. கோரிக்கையை பரிசீலிக்க நிர்வாகம் ஏற்றுக்கொண்டது.

மேலும் LTC சலுகை திரும்பவும் வழங்குதல், பென்சன் விவகாரம் , Multi Tasking Cadre உருவாக்கம் , இலாகா தேர்வுகளில் Negative மதிப்பெண் வழங்கும் முறையை நீக்குதல் , ஊழியர் நிரந்தரத்திற்கான தேர்வு , 01.01.2007 முதல் MTNL ஊழியர்களுக்கு இணையாக ஊதிய மாற்றம் , அங்கீகரிக்கப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு இலவச மொபைல் சேவை ஆகிய கோரிக்கைகள் விவாதிக்கப்பட்டன.