28 June 2018

ஊதியக்குழு உறுப்பினர்களை பரிந்துரைக்க அழைப்பு...


இன்று 28.08.2018 அன்று  நிர்வாகம் நமது சங்கத்தின் பொதுச் செயலருக்கு ஊதியக்குழு அமைப்பது தொடர்பாக கடிதம் ஒன்றை எழுதியுள்ளது 

அதில்; 

  • நிர்வாகம் DPE இலாகாவின் பரிந்துரைகளுக்குட்பட்டு ஊதிய மாற்றம் குறித்து விவாதிக்கும் எனவும் 
  • ஊதிய உடன்பாடு அமுல்படுத்தப்படும் முன்பு DOT இலாகாவுக்கு அனுப்பப்பட்டு அதன் ஒப்புதல் பெறப்படும் எனவும்
  • ஊதிய மாற்றம் பற்றி விவாதிக்க நிர்வாகம் மற்றும் ஊழியர் தரப்பு அடங்கிய 10 நபர் குழு அமைக்கப்படவுள்ளதாகவும்
  • அவ்வாறு அமைக்கபடவுள்ள ஊதியக்குழுவில் நிர்வாகத் தரப்பு சார்பாக 5 பேரும் ஊழியர் தரப்பு சார்பாக 5 பேரும் இடம் பெறுவார்கள் எனவும்
  • ஊழியர் தரப்பு உறுப்பினர்களில் முதன்மை அங்கீகாரச் சங்கத்தின் சார்பாக 3 பேரும்
  • இரண்டாவது அங்கீகாரச் சங்கத்தின் சார்பாக 2 பேரும் ஊதியக் குழுவில் இடம் பெறுவார்கள் எனவும்

ஆகவே தங்களது சங்கத்தின் சார்பாக இரண்டு உறுப்பினர்களை நியமித்து அறிவிக்க வேண்டும் என்று நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

முன்னதாக நேற்று 27.06.2018 அன்று நமது மத்திய சங்கம் இருதரப்பு ஊதிய குழு அமைப்பது சம்பந்தமாக நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியிருந்தது. அதில் ஊதியக்குழுவிற்கு CMD அல்லது DIRECTOR (HR) அவர்களை ஊதியக்குழுவின் தலைவராக்கவேண்டும் எனவும் , ஊதியக்குழுவில் அனைத்து சங்க தலைவர்களையும் சேர்க்க வேண்டும் எனவும் கோரியிருந்தது.