27 June 2018


BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு 
 கூட்ட முடிவுகள்….

BSNL  அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பபின் கூட்டம் நேற்று 26/06/2018 அன்று டெல்லியில் BSNLMS சங்க அலுவலகத்தில் தோழர் K.S.சேசாத்ரி , அகில இந்திய துணைப்பொதுச்செயலர் NFTE அவர்கள் தலைமையில் நடைபெற்றது. BSNLEU , NFTE , SNEA , AIBSNLEA , FNTO , AIGETOA , BSNLMS , TEPU மற்றும் ATM ஆகிய சங்கங்களின் பொதுச்செயலர்களும் , முன்னணித்தலைவர்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

நீண்ட ஆலோசனைகள், விவாதங்களுக்குப்பிறகு கீழ்க்கண்ட போராட்டத்திட்டங்கள் வகுக்கப்பட்டன.

ஜூலை 11-2018 அன்று ...

CORPORATE அலுவலகம்…மாநிலத்தலைநகர்களில் அமைந்துள்ள CCA அலுவலகங்கள்...மற்றும் மாவட்டத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது...

ஜூலை 25,26,27 ஆகிய நாட்களில்...

தலைநகர்  டெல்லி…மாநிலத்தலைநகரங்கள்… மற்றும் மாவட்டத் தலைநகரங்களில்…தொடர் உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொள்வது

: கோரிக்கைகள் :

தொலைத்தொடர்பு அமைச்சர் அவர்களே…

ஊதிய உயர்வு…ஓய்வூதிய உயர்வு…ஓய்வூதியப்பங்களிப்பு..
BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு என 24/02/2018 அன்று அனைத்து சங்கங்களிடம்அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்…

BSNL  உயர் அதிகாரிகளே….

BSNL நிதிச்சுமையோடு போராடும் காலகட்டத்தில் தேவையற்ற விரயச்செலவுகளை தவிர்ப்பீர்…

கூட்டமைப்பின் அடுத்த கூட்டம் 04.07.2018 அன்று BSNLMS சங்க அலுவலகத்தில் நடைபெறும்