27 June 2018


BSNL நிறுவனத்திற்கு
Affordability சரத்திலிருந்து விலக்களிக்கக் கோரி
DPE இலாகவிற்கு DOT எழுதிய கடிதம்...

BSNL ஊழியர்களுக்கு 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த தேவையான நியாயங்களையும், வருமான வழிகளையும் காட்டி ஒரு முழு அறிக்கையை BSNL நிர்வாகம் DOTயிடம் சமர்ப்பித்தது. அதன் அடிப்படையில் DOT நிர்வாகம் Affordability சரத்திலிருந்து விலக்கு கோரி DPE  இலாகாவிற்கு 20.03.2018 அன்று கடிதம் எழுதியது. தற்போது அக்கடிதத்தின் நகலை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நமது மத்திய சங்கம் பெற்றுள்ளது.

அக்கடிதத்தின் சாரம்சம் என்னவெனில்;

2.  DPE இலாகாவின் 30.08.2017 ஆணையின் படி ஒவ்வொரு பொதுத்துறையும்  தங்களின் கொடுதிறன் அடிப்படையில் ஊழியர்களின்  சம்பள மாற்றம் குறித்து பரிசீலிக்கலாம் அதேசமயம் சம்பள அறிக்கை சம்பந்தப்பட்ட அமைச்சத்துக்கு அனுப்பப்பட்டு அதன் மீது ஒப்புதல் பெறுவதும் அவசியம். இந்நிலையில் BSNL நிறுவனம் 15% ஊதிய நிர்ணயத்துடன் 01.01.2017 முதல் கொடுதிறனை விலக்கி தங்களது அதிகாரிகளுக்கு ஊதிய மாற்றம் வழங்க ஒரு திட்டத்தை சமர்ப்பித்துள்ளது. BSNL நிறுவனம் 3வது ஊதியமாற்றம் வழங்க  Affordability சரத்திலிருந்து விலக்கு கோருவதற்கான கூறும் நியாயங்கள் என்னவெனில் ;

      I.      அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்காக அரசால் தனித்த நிறுவனமாக அறிவிக்கப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களுக்கு அதன் நடைமுறைச் செலவினங்களுக்கு மத்திய பட்ஜெட்டிலிருந்து நிதி ஆதரவு ஏதும் வழங்கப்படுவதில்லை. அத்தகைய பொதுத்துறை நிறுவனங்களுக்கு  Affordability நிபந்தனை பொருந்தாது. தேசிய தொலைத் தொடர்புக் கொள்கை-99ன் அடிப்படையில் BSNL நிறுவனம் உருவாக்கப்பட்டது. முந்தைய DOT/DTS போன்ற அரசுத்துறையில் பணிபுரிந்த ஊழியர்கள் அனைவரும் முழுமையான பணிப்பாதுகாப்பு வழங்கப்படும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையில் மொத்தமாக  BSNL  நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றப்பட்டார்கள். நடப்பு தேதியில் BSNL நிறுவனம் 1.75கோடி ரூபாய்களை தங்களது ஊழியர்களுக்கு ஊதியமாக கொடுப்பதன் மூலம் செலவிடுகிறது. இந்த அடிப்படையில் தொலைத்தொடர்புத்துறையில் அரசின் நிகழ்ச்சி நிரலை மேற்கொள்வதற்காக BSNL நிறுவனம் அரசு நிறுவனமாக உருவாக்கப்பட்டது.

     II.      அரசின் 100% பங்குகளும் BSNL நிறுவனத்தின் வசமே உள்ளது. அதன் பெரும்பான்மை பங்குதாரர்களாக DOTயால் பணியர்மத்தப்பட்ட ஊழியர்கள் உள்ளனர். அவர்கள் BSNL நிறுவனத்திற்கு மாற்றப்படாமல் இருந்திருந்தால் 7வது ஊதியக்குழுவின் பலன்களைப் பெற்றிருப்பார்கள்.

    III.      BSNL நிறுவனம் பல்வேறு சவால்களுடன், வணிகத்திற்கு பொருந்தாத பகுதிகள் ,அதி தீவிர இடதுசாரி செயற்பாட்டுபகுதிகள் மற்றும் நாட்டின் பாரதூர பகுதிகளிலும் நாட்டின்  சமுகப்பொருளாதார முக்கியத்துவத்திற்காக அரசின் சமுக லட்சியங்களை அடைவதற்காக நாடுமுழுவதிலும் தனது சேவையை வழங்கி வருவதன் மூலம் முதன்மையான பொதுத்துறையாக விளங்கி வருகிறது. அவசர காலங்களின் போதும் இயற்கைச்சீற்றங்களின் போதெல்லாம் மக்களுக்கு ஆதாவாக அவர்களது பின்னால் நின்று செயல்பட்டுள்ளது.

    IV.      பாரத் நெட், Network for Spectrum , LWE மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கான சிறப்புத்திட்டங்கள் ஆகிய அரசின் திட்டங்களை செயலாற்றுவதற்கான கட்டமைப்புகளை BSNL நிறுவனம் உருவாக்கி பராமரித்து வருகிறது.

    V.      கடுமையான போட்டிச் சூழ்நிலையிலும் சந்தையில் வியாபாரத்தை நிலைநிறுத்தி ஒழுங்குபடுத்துவதில் BSNL ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது.

    VI.      இத்தகைய கடுமையான சூழ்நிலையில் தனது வேகத்தை குறைக்காமல் செயலாற்றுவதற்கு அதன் ஊழியர்களை முழுமையாக தக்கவைக்க வேண்டிய தேவை BSNL நிறுவனத்துக்கு உள்ளது.

   VII.   BSNL நிறுவனத்தின் 95%க்கும் அதிகமான மாவட்ட மற்றும் மாநிலப் பொதுமேலாளர்கள் அனைவரும் DOT அதிகாரிகளால் நிர்வகிக்கப்பட்டு வருகிறார்கள் அவர்கள் 7வது ஊதியக்குழுவின் அடிப்படையில் தங்களது ஊதிய மாற்றத்தை பெற்றுவிட்டனர். இத்தைகைய சூழ்நிலையில், 3வது ஊதியமாற்றம் கிடைத்துவிடும் என்ற ஊழியர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாவிட்டால் அவர்களை நிர்வகிப்பதில் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் ஒரு கடினமான சூழ்நிலையை எதிர்கொள்ள நேரிடும்.

3. ஊதியமாற்றத்தை அமுல்படுத்த 2018-19ம் நிதியாண்டில் ரூ.6485 கோடி ரூபாய் அளவிற்கு நிதிச்சுமையை தாங்க நேரிடும் எனவும், 2019-20 நிதியாண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் கூடுதலாக ரூ.2980/- கோடி செலவாகும் என BSNL  தெரிவித்துள்ளது.

4. BSNL 2009-10 நிதியாண்டிலிருந்து கடுமையான நட்டத்தை சந்தித்து வருகிறது. BSNL ன் வருடாந்திர அறிக்கையின் படி 2014-15ல் ரூ.8843 கோடியும் , 2015-16ல் ரூ.4793 கோடியும் நட்டத்தை சந்தித்துள்ளது. DPE வழிகாட்டுதலின் படி ஆரம்ப கட்ட நலிவுறு நிறுவனமாக BSNL அறிவிக்கப்பட்டுள்ளது. DPE வழிகாட்டுதலின் படி DOT இலாகா BSNL புத்தாக்க திட்டத்தை தயாரித்துள்ளது அதற்காக IIM அகமதாபாத் , IIM பெங்களூரு , மற்றும் IIM கொல்கத்தா ஆகிய மூன்று மேலாண்மை கல்வி நிறுவனங்களிடம் திட்ட வரைவு கேட்டுள்ளது. இந்த மேலாண்மை நிறுவனங்களிடம் திட்ட வரைவு பெறப்பட்டு ஏதேனும் ஒரு நிறுவனத்திற்கு திட்ட செயலாக்க ஆணை வழங்கிடும் திட்டம் பரிசீலனையில் உள்ளது.

5. மேலும் நிறுவனத்தின் 2016-17ம் ஆண்டறிக்கையின் படி, ரூ.28404 கோடி ரூபாய் வருமானத்தை தனது செயல்பாட்டின் மூலம் ஈட்டியுள்ளது, அதில் மொத்த ஊழியர் செலவு 15715 கோடி ரூபாயாக உள்ளது இது மொத்த வருவாயில் 55% சதமாக உள்ளது. இது ஒப்புநோக்குகையில் ஒட்டுமொத்த துறையின் சராசரி அளவான 6 முதல் 8 சதவீத அளவிற்குள்ளது.

6. மேற்கண்ட நிலைமைகளின் அடிப்படையில், BSNL சமர்ப்பிதவற்றை ஆராய்ந்து 3வது ஊதியமாற்றத்தை அமுலாக்குவதற்கு Affordability சரத்திலிருந்து BSNL  நிறுவனத்திற்கு விலக்கு அளிக்கலாமா என்பது குறித்து DPE இலாகா தனது கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும் என DOT கேட்டுக் கொண்டுள்ளது.

மேற்கண்ட கடிதத்திற்கு DPE இலாகா தனது பதில் கடிதத்தில் Affordability சரத்திலிருந்து விலக்கு பெற அமைச்சரவையின் ஒப்புதல் தேவை என கூறியது. நமது மத்திய சங்கம் அனுகிய போதும் இதே பதில் தான் கிடைத்தது. DPE இலாகாவின் வழிகாட்டுதல் படி DOT இலாகா தற்போது அமைச்சரவைக் குறிப்பை தயாரிப்பதில் மும்முரமாக உள்ளது.