4 June 2018


 எழுச்சியான உள்ளிருப்பு போராட்டம்...

தோழர்களே ! தோழியர்களே!

TM Long Say மாற்றலில் நிர்வாகத்தின் அலட்சியப் போக்கைக் கண்டித்து போராட்டத்திட்டம் வகுத்து கடிதம் கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். நிர்வாகத்துடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை. நிர்வாகத்தின் நிலைபாட்டை மாநிலச்சங்கத்திடடம் தெரிவித்தோம். மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் இன்று(04/06/2018) நமது கூட்டணிச்சங்கங்களுடன் இணைந்து பொதுமேலாளர் அறையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினோம்.

மாநிலச்சங்கமும் மாநில அலுவலகத்தில் GM(HR) அவர்களைச் சந்தித்து நமது உணர்வுகளையும் , நமது போராட்டத்தின் நியாயத்தையும் தெளிவாக எடுத்துரைத்தது. GM(HR) அவர்கள் நமது நிலைபாட்டை சரி என உணர்ந்துள்ளார். மேலும் முதன்மைப் பொதுமேலாளர் விடுமுறையில் இருப்பதாலும் PGM சந்தோஷ் அவர்கள் தற்காலிக CGM ஆக இருப்பதாலும் பாலிசி விசயத்தில் Regular CGM தலையிடுவதுதான் சரியாக இருக்கும் என்றும், வரும் 6ம் தேதி Regular CGM மீண்டும் பணிக்கு வரவுள்ளார் அன்று நமது பிரச்சினையில் தலையிட்டு தீர்ப்பார் என நமது மாநிலச்சங்கத்தலைவர்களிடம் உறுதி அளித்துள்ளார்.

ஆகவே நாம் நமது போராட்டத்தை தற்போது ஒத்தி வைக்கிறோம். மாநிலச்சங்கத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நமது போராட்டம் மீண்டும் தொடரும்.

உள்ளிருப்பு போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள், தோழியர்கள் அனைவருக்கும் மாவட்டச்சங்கம் தனது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது.

நமது போராட்டத்தை வாழ்த்திய அனைத்து தோழர்களுக்கும் விருதுநகர் மாவட்டச்சங்கம் தனது நன்றிகளை உரித்தாக்குகிறது.

மீண்டும் கூடுவோம்!  போராடுவோம்! வெற்றி நமதே!