5 June 2018

மேம்படுத்தப்பட்ட மொபைல் திட்டம் 
BSNL ஊழியர்களுக்கு அமுலானது...
( 200 க்கு பதிலாக 600 )


நவம்பர்’2017ல் நடைபெற்ற 35வது தேசிய குழு கூட்டத்தில் ஊழியர் தரப்பு நமது ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் ரூ.200/- க்கு பேசும் வசதிக்குப் பதிலாக பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும்  Plan-429 திட்டத்தை ஊழியர்களுக்கு விஸ்தரிக்க வேண்டுமென கோரிக்கை வைத்து விவாதித்தது.

நிர்வாகமும் பரிசிலிக்க ஒப்புக் கொண்டது. அதன் அடிப்படையில் நிர்வாகம் BSNL ஊழியர்களுக்கென ஒரு திட்டத்தை தனது 05.06.2018 உத்தரவு மூலம் அமுல்படுத்தியுள்ளது.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

1.   பணமதிப்பு MRP ( Inclusive GST ) – ரூ.600/-
2.   செல்லத்தக்க காலம் ( Validity Period ) – 90 நாட்கள்
3. குரல் அழைப்புகள் முற்றிலும் இலவசம் ( உள்ளூர் மட்டுமின்றி ரோமிங் பகுதிகளான MTNL ஏரியாக்கள் உட்பட)
4.தினந்தோறும் நாள் ஒன்றுக்கு 100 குறுந்தகவல் இலவசமாக அனுப்பும் வசதி.
5. 
மேலே சொல்லப்படாத சேவைகளுக்கு Plan-429 திட்டத்தின் படியான கட்டணம் பொருந்தும்.

உத்தரவு உடனடியாக அமுலுக்கு வருகிறது.