20 July 2018



வெற்றிகரமான ஊதியக் குழுவின் முதல் கூட்டம்

BSNL ஊழியர்களின் 3வது ஊதிய திருத்த கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் இன்று 20.07.2018 அன்று நல்ல இணக்கமானதொரு சூழ்நிலையில் கூடியது. குழுவின் தலைவர் திரு.H.C.பந்த்,CGM(Legal) அவர்கள் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.



நிர்வாக தரப்பு  சார்பில் ;



திரு. H.C.பந்த் - CGM(Legal)

திரு. செளரப் தியாகி - Sr.GM(Estt)

திருமதி ஸ்மிதா செளதாரி - Sr.GM(EF)

திரு A.M.குப்தா - GM(SR)

திரு சின்ஹா - DGM(SR)  ஆகியோரும்



ஊழியர் தரப்பு சார்பில்; 



தோழர் பல்பீர்சிங் - தலைவர் - BSNLEU

தோழர் P.அபிமன்யு - பொதுச்செயலர்- BSNLEU

தோழர் ஸ்வபன் சக்ரவர்த்தி -துணைப்பொதுச்செயலர் - BSNLEU

தோழர் P.அசோகாபாபு - துணைத்தலைவர் - BSNLEU

தோழர் அமினேஷ் மிஸ்ரா - துணைத்தலைவர் - BSNLEU

தோழர் இஸ்லாம் அகமது - தலைவர் - NFTE

தோழர் சந்தேஸ்வர் சிங் - பொதுச்செயலர் - NFTE

தோழர் K.S.சேஷாத்ரி - துணைப்பொதுச்செயலர்- NFTE  ஆகியோரும் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.



திரு A.M.குப்தா - GM(SR) அவர்கள் குழு உறுப்பினர்களை வரவேற்றார். ஊதியக்குழுவினை விரைவாக கூட்டியதற்கு ஊழியர் தரப்பு தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டது. மேலும் குறைந்த காலத்தில் ஊதிய திருத்தத்தை செயல்படுத்துவதற்கான அனைத்து ஒத்துழைப்பையும் நல்குவதாக உறுதியளித்தார்கள்.



பின்பு நிர்வாக தரப்பு சார்பில் ஊழியர்களுக்கான ஊதிய திருத்தம் சம்பந்தமாக DPE இலாகா 24.11.2017 அன்று வெளியிட்ட வழிகாட்டுதல் சரத்து விபரங்கள் விரிவாக விளக்கப்பட்டன.



DPE இலாகாவின் வழிகாட்டுதலில் பாரா-6ல், மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ஊழியர் அதிகாரிகள் ஊதிய நிலைகளில் குளறுபடிகளைத் தவிர்ப்பதற்காக படிப்படியான பஞ்சப்படி இணைப்பு அல்லது படிப்படியான ஊதிய நிர்ணயத்தை ( Graded DA Neutralisation or Graded DA Fitment ) அமுல்படுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டிருந்தது குறித்து ஊழியர் தரப்பு சந்தேகம் எழுப்பியது. அதற்கு தேவையான விளக்கங்கள் DPE இலாகாவிடமிருந்து பெறப்படும் என நிர்வாகம் பதிலளித்தது.



ஊதியக்குழுவின் கூட்டம் அடிக்கடி நடத்தப்பட்டால் ஊதிய திருத்தத்தினை 31.08.2018க்குள் இறுதிசெய்யலாம் என ஊழியர் தரப்பிலிருந்து எடுத்துரைக்கப்பட்டது. நிர்வாக தரப்பு விரைந்து முடிக்க தனது முழு ஒத்துழைப்பையும் நல்குவதாக உறுதியளித்தது.



ஊதியக்குழுவின் அடுத்த கூட்டத்தை வரும் ஆகஸ்ட் மாதம் 9ம் தேதி கூட்டுவது எனது முடிவெடுக்கப்பட்டது. அடுத்த கூட்டத்தில் புதிய ஊதிய விகிதங்கள் கட்டுமானம் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.

குறிப்பு : ஊதிய மாற்றம் சம்பந்தமான வரைவறிக்கையினை ( Proposal ) தயாரிப்பதற்கான ஊழியர் தரப்பு கூட்டம் வரும் ஆகஸ்ட் மாதம் 03ம் தேதி NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறும்.