3 July 2018

Sr.TOA கேடருக்கு - Screening Test - நடத்திட
 வழிகாட்டுதல் வெளியிடப்பட்டது...

12.06.2018 அன்று நடைபெற்ற தேசிய கூட்டுக் கூட்டத்தில் நடந்த விவாதத்தில்Sr.TOA கேடருக்கு - Screening Test - நடத்திட வேண்டுமென நமது மத்திய சங்கம் விவாதித்தது. கோரிக்கையை வலியுறுத்தி மத்திய சங்கம் நிர்வாகத்திற்கு கடிதமும் எழுதியது. அதன் அடிப்படையில் நிர்வாகம் நேற்று 02.07.2018 அன்று Sr.TOA கேடருக்கு - Screening Test - நடத்திட வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது.

அக்கடிதத்தில் நிர்வாகம்  Sr.TOA கேடருக்கு - Screening Test நடத்திட ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் , பெரும்பாலான மாநிலங்களில் கடந்த 5 வருடங்களில் ஸ்கிரினிங் தேர்வு நடபெறவில்லை எனவும் , Sr.TOA கேடருக்கான ஆளெடுப்பு விதியின் சரத்துகளில் பாரா-12ன் படி 10+2 கல்வித்தகுதி இல்லாத ஊழியர்களுக்கு ஸ்கிரினிங் தேர்வு நடத்திட ஏற்பாடு உள்ளது எனவும் , மேலும் இது குறித்து தனியாக உத்தரவு ஏதும் வெளியிடபடவில்லை எனவும் மாநில நிர்வாகங்கள் கார்ப்பரேட் அலுவலக உத்தரவின் படி தனியாக தேர்வு நடத்திக்கொள்ளலாம் எனவும் தெளிபடுத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாநில நிர்வாகங்களும்  Recruitment Rule of Sr.TOA(G)-2007 - Sub Para 1,2 & Column 12ன் படி உடனடியாக Sr.TOA கேடருக்கு உடனடியாக ஸ்கிரினிங் தேர்வு நடத்தலாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அதற்கான பாடத்திட்டங்கள் இணைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மேலும் ஊழியர் TOA(G) கேடருக்கான  கன்பர்மேஷன் தேர்வில்  கண்டிப்பாக தேர்வு பெற்று கன்பர்மேஷன் பெற்றிருக்க வேண்டும் எனவும்,  TOA(G) கேடரில் கன்பர்மேஷன் தேர்வு நடைபெறாமல் ஊழியர்கள் தகுதி பெறாமல் விடுபட்டு இருப்பின் அவர்களுக்கான கன்பர்மேஷன் தேர்வினை 30.09.2018க்குள் நடத்தி முடிக்கவேண்டும் எனவும் ,  

இறுதியாக Sr.TOA கேடருக்கு  ஸ்கிரினிங் தேர்வு நடத்துவதற்கான அனைத்து நடைமுறைகளையும் 31.12.2018க்குள் முடிக்க வேண்டும் என மாநில நிர்வாகங்களை  கார்ப்பரேட் அலுவலகம் கேட்டுக் கொண்டுள்ளது.