3 July 2018

குழந்தை பராமரிப்பு விடுப்பு...
மத்திய அரசின் திருத்தங்கள் ...


குழந்தை பராமரிப்பு விடுப்பு விதிகளில் மத்திய அரசு அவ்வப்போது திருத்தங்களை வெளியிடுகிறது. ஆனால் அவை BSNL ஊழியர்களுக்கு பொருந்துமா என்பது சந்தேகமாகவே இருந்து வந்தது. தற்போது அத்திருத்தங்கள் BSNL ஊழியர்களுக்கும் பொருந்தும் வகையில் BSNL கார்ப்பரேட் அலுவலகம் 26.06.2018 அன்று உத்தரவிட்டுள்ளது. 

திருத்த உத்தரவு : 21011/08/2013-Estt(AL)-FAQ ON CCL Dated 25/03/2013 

i.பெண் ஊழியர்களின் வாரிசுகள் வெளிநாட்டில் படிக்க சென்றிருக்கும் சமயத்திலோ அல்லது வெளிநாட்டில் இருக்கும் மைனர் வாரிசுகளை கவனிக்கும் பொருட்டோ அங்கே செல்வதற்கு பெண் ஊழியர்கள் குழுந்தைகள் பராமரிப்பு விடுமுறையை இது குறித்த மற்ற விதிகளுக்குட்பட்டு பயன்படுத்திக் கொள்ளலாம்.


ii. ஈட்டுவிடுப்பில் ஒரே தடவையாக 180 நாட்களுக்கு மேல் விடுமுறை எடுக்கக்கூடாது என்ற கட்டுப்பாடு குழந்தை பராமரிப்பு விடுப்புக்கு கிடையாது. மற்ற நிபந்தனைகளான 15 நாட்களுக்கு குறைவாக விடுமுறை எடுக்ககூடாது அல்லது 3 தடவைகளுக்கு மேல் விண்ணப்பிக்க கூடாது போன்றவை பொருந்தும்.

திருத்த உத்தரவு : 13018/06/2013-Estt(L) Dated 05/06/2014

CCL குறைந்தபட்சமாக 15 நாட்களாவது எடுக்க வேண்டும் என்ற தேவை நீக்கப்படுகிறது. இது குறித்த மற்ற நிபந்தனைகளில் மாற்றம் இல்லை

திருத்த உத்தரவு : 13018/06/2013-Estt(L) Dated 03/04/2018

i. குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும் ஊழியர் தனது அதிகாரியின் முன் அனுமதியில் பேரில் வெளியூருக்குச் செல்லலாம்.

ii. குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும்போது LTC சலுகையை பயன்படுத்தலாம்.

iii. குழந்தை பராமரிப்பு விடுப்பில் இருக்கும் ஊழியர் தனது அதிகாரியின் முன் அனுமதியோடு தடையில்லா சான்றிதழ் பெற்று வெளிநாட்டுக்குச் செல்லலாம்.