கேரள
மக்களுக்கு
உதவுவோம்…
தானாக
முன்வந்து
உதவுவோம்..
BSNL அனைத்து சங்கங்களின் சார்பாக BSNL
ஊழியர்களின் ஒரு நாள் அடிப்படைச்சம்பளத்தை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படி நிர்வாகம் அனைத்து ஊழியர்களும் தாமாக முன் வந்து உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது. ஆகஸ்ட்
2018 மாதச் சம்பளத்தின் அடிப்படையில் ஒருநாள் அடிப்படைச்சம்பளம் மட்டும் வெள்ள நிவாரண நிதியாக பிடித்தம் செய்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தன்னிச்சையான ஆதரவாக இருந்தாலும் ஊழியர்கள் தங்களுக்கு நிதி வழங்க விருப்பம் இல்லாவிடில் தங்களது விருப்பமின்மையை சம்பந்தப்பட்ட கணக்கதிக்காரி வசம் கடிதமாக கொடுக்கலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும் நிதி கார்ப்பரேட் அலுவலகத்தின் மூலமாக சம்பந்தப்பட்ட கணக்கில் மையமாக செலுத்தப்படும். பிடித்தம் செய்யப்பட்ட தொகையின் மதிப்பை
15.09.2018க்குள் கார்ப்பரேட் அலுவலத்திற்கு தெரியப்படுத்திட வேண்டுமென மாநில நிர்வாகங்களை கேட்டுக் கொண்டுள்ளது.
கேரள மாநில BSNL
ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ள நிவாரண நிதி வழங்கும் ஊழியர்கள் வருமான வரி சரத்து
80Gன் படி வரிவிலக்கு பெறலாம்.
கேரள மக்களுக்கு நாம் இருக்கிறோம் என உரத்துச் சொல்லும் நேரமிது. முன்னின்று நிதி வழங்குவோம்…