6 September 2018

37வது தேசிய கூட்டாலோசனைக்குழு  
விவாதக் குறிப்புகள்...

நடைபெறவுள்ள 37வது தேசிய கூட்டாலோசனைக்குழுக் கூட்டத்தில் விவாதிப்பதற்காக பின்வரும் விவாதக் குறிப்புகள் நமது சங்கத்தின் சார்பாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
 
  • 10 ஆண்டு பணி முடித்த கேசுவல் மஸ்தூர்களை  01/08/2018 அன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் நிரந்தரம் செய்திட வேண்டும்.
  • 01/10/2000க்கு முன் தற்காலிக அந்தஸ்த்து  பெற்று டெலிகாம் மெக்கானிக் ஆக பதவி உயர்வு பெற்றவர்களை DOT ஊழியராக கருத வேண்டும்.
  • 01/10/2000 க்குமுன் தற்காலிக அந்தஸ்த்து  பெற்று R.M ஆக நிரந்தரம் பெற்றவர்களுக்கு NEPP  பதவி உயர்வுத் திட்டத்தின் படி முதல் பதவு உயர்வு  4வருடங்களில் வழங்கப்படவேண்டும்.
  • நேரிடையாக பட்டப்படிப்பு தேர்வு எழுதியவர்களுக்கு நீதிமன்ற தீர்ப்பின்படி பதவி உயர்வு வழங்க வேண்டும்.
  • ஊழியர்கள் ரூபாய் ஒரு லட்சத்திற்க்கு மேல் வாங்கும் அசையும்/ அசையா சொத்துக்களை தெரிவித்து நிர்வாக ஒப்புதல் பெறவேண்டும் என்ற விதி உள்ளது. இந்த தகுதி வரம்பை உயர்த்திட வேண்டும்.
  • ஹிந்தி மொழிபெயர்ப்பாளர் / ராஜ் பாசா அதிகாரி பதவிகளுக்கான பதவி உயர்வு தேர்வுகள் நடத்தப்படவேண்டும்.
  • 12 மாதம் சேவை முடித்து 1 ம்தேதி பணியில் இல்லாமல் பணி ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ஒரு ஆண்டு உயர்வுத்தொகை வழங்கப்படவேண்டும்.
  • 01/10/2000 க்கு பின் பணியில் சேர்ந்த TSM ஊழியர்களின் ஜனாதிபதி உத்திரவு வழங்கப்படாமல் உள்ளது. காலதாமில்லாமல் வழங்க வேண்டும்.
  • கார்ப்பரேட் அலுவலகத்தின் தேவையற்ற நீதிமன்ற அப்பீல்கள் தவிர்த்து ஊழியர்களுக்கு சாதமாக பெறப்பட்ட தீர்ப்புகள் அமுலாக்கம் செய்யப்படவேண்டும். 
  • குறைந்த பட்ச ஓய்வூதியத்தை 7 வது ஊதிய குழு ரூ9000 ஆயிரம் பரிந்துரைந்துள்ளது. அப்பரிந்துரை நமது ஊழியர்களுக்கும்  விஸ்தரித்து   வழங்கப்பட வேண்டும்.
  • நிர்வாகத்தின் பதவி உயர்வு தேர்வுகள் தற்போது இணைய தளத்திலேயே எழுதும் படி நடத்தப்பட்டுவருகின்றன. அதற்கான பயிற்சிகள் ஊழியர்களுக்கு வழங்கப்படவேண்டும்.
  • கேசுவல் ஊழியர்களுக்கு 7 வது ஊதிய குழு ஊதியத்தை வழங்க வேண்டும்.