6 September 2018

புதிய பதவி உயர்வுத்திட்டம் உருவாக்க மத்திய சங்கம் கோரிக்கை...

ஊழியர்களுக்கான பதவி உயர்வுத்திட்டம் 2010ம் ஆண்டு உருவாக்கப்பட்டு 01.10.2000 முதல் முன் தேதியிட்டு அமுல்படுத்தப்பட்டது.

பதவி உயர்வுத்திட்டம்  BSNL ஊழியர் சங்கம் மட்டும் அங்கீகரிக்கப்பட்ட காலத்தில் உருவாக்கப்பட்டது.  ஊழியர்களுக்கு ஏகப்பட்ட பாதிப்புகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதனால்  நமது சங்கம் அப்பதவி உயர்வுத்திட்டத்தை  Non-Executive Promotion Policy என்பதற்கு மாறாக Non-Excusicutive Punishment Policy என விமர்சித்தது.

பதவியின் அடிப்படையில் பெற்ற பதவி உயர்வுகூட ஒரு பதவி உயர்வாக கருதப்பட்டது.

SC / ST  ஊழியர்களுக்கான சலுகைகள் புதிய உயர்வுத்திட்டத்தில் விஸ்தரிக்கப்படவில்லை.

அதிகாரிகளுக்கான பதவி உயர்வுத்திட்டத்திற்கும் ஊழியர்களுக்கான பதவி  உயர்வுத்திட்டத்திற்கு மலை அளவு வேற்றுமை இருந்தது.

புதிய பதவி உயர்வுத் திட்டத்தில் உள்ள சரத்துகளுக்கும் அதிகமாக விளக்கங்கள் வெளியிடப்பட்டன.

நமது மத்திய சங்கம்  புதிய பதவி உயர்வுத்திட்டம் ஊழியர்களுக்கு எதிராக உள்ளது எனக் கூறி ஆரம்பம்  முதலே எதிர்த்து வந்தது. அதனை செழுமைப்படுத்தவும் முயற்ச்சித்தது. ஆனால் நிர்வாகம் ஊழியர் சங்கத்துடன் கலந்தாலோசனைக்குப் பிறகே நிறைவேற்றப்பட்ட திட்டம் எனவே அதில் மாற்றம் செய்ய வாய்ப்பே இல்லை எனக் கூறி மறுத்தது. 

ஆனாலும் நமது சங்கம் விடாமல் தொடர்ந்து முயற்சித்து வருகிறது. அதன் அடிப்படையில் ஊழியர்களுக்கு புதிய பதவி உயர்வுத்திட்டத்தை உருவாக்க வேண்டும் என நமது மத்திய சங்கம் நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று 06.09.2018 நமது நிறுவனத்தின் CMD அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளது.