4 August 2018


BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 
02.08.2018 கூட்ட முடிவுகள்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு 02.08.2018 அன்று BSNLMS அலுவலகத்தில் தோழர் K.செபஸ்டின் GS SNEA  அவர்களது தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் BSNLEU , SNEA, AIBSNLEA , AIGETOA , BSNLMS , ATM BSNL , TEPU , BSNL OA ஆகிய சங்கங்களின் பொதுச்செயலர்களும் , பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


 

NFTE சங்கத்தின் சார்பாக 

தோழர் சந்தேஸ்வர் சிங் GS     

தோழர் K.S.சேஷாத்ரி Dy.GS , 

தோழர் ராஜமெளலி , Treasurer  மற்றும் 

தமிழ்மாநிலச் செயலர் தோழர் K.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

 

நீண்ட விவாதங்களுக்குப் பிறகு கீழ்க்கண்ட முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்பட்டன.

 

1.   FNTO & SEWA BSNL பொதுச்செயலர்கள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்த தொடர் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை என BSNL CMD மற்றும் DOT Secretaக்கு எழுதிய கடிதங்களை முற்றிலும் நிராகரிப்பது என்றும் அவர்களது கையெழுத்துக்களை பிரதி எடுத்து பயன்படுத்திய விவாகாரம் பற்றி அவர்களுக்கு விளக்குவது என்றும் மேலும் அவர்கள் எதிர்வரும் போராட்டங்களில் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 

2.   கூட்டமைப்பு சார்பாக 11.07.2018 அன்றைய ஆர்ப்பாட்டம் மற்றும் 24.07.2018 முதல் 26.07.2018 வரை நடைபெற்ற தொடர் உண்ணாவிரதப்போராட்டம் ஆகியவை குறித்து விவாதிக்கவும்,  மற்றும் 01.08.2018 மத்திய அமைச்சர் திரு மனோஜ் சின்கா அவர்களுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து  தங்களது திருப்தியை வெளிப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது. மேலும் கூட்டமைப்பு பலகட்ட போராட்டங்களை நடத்திய பின்பும் DOT இலாகா சார்பில் பிரச்சினைகள் தீர்விற்காக கடந்த 5 மாதங்களில் ஒரு கூட்டம் கூட நடத்தப்படவில்லை எனபதனை DOT இலாகாவுக்கு விளக்கும் வகையில் DOT செயலருக்கு கடிதம் எழுதுவது எனவும் , DOT நிர்வாகத்துடன் கூடிய விரைவில் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்வது எனவும் அப்படி கூட்டம் கூட்டப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு ஏற்படாவிடில் அடுத்த கட்ட போராட்டம் குறித்து திட்டமிடுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.

 

3.   மேலும் BSNL உயர் அதிகாரிகளின் தண்டச்செலவுகளை தடுத்து நிறுத்துவது மற்றும் BSNL நேரடி நியமன ஊழியர்களுக்கு 30% ஓய்வூதிய பலன்கள் வழங்குவது, தேவையற்ற காலம் கழிந்த இயந்திரங்களை BSNLக்கு வாங்கப்படுவது குறித்தும் BSNL CMD அவர்களுக்கு கடிதம் எழுதுவது எனவும்.

 

4.   BSNL at your door steps இயக்கத்தை அனைத்து மட்டங்களிலும் தீவிரமாக முன்னெடுப்பது.

 

5.   DOT செயலருடன் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்தி CMD அவர்களுக்கு கடிதம் எழுதுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

 

6.   கூட்டமைப்பின் அடுத்த கூட்டத்தை 23.08.2018 அன்று BSNLMS அலுவலகத்தில் கூட்டுவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.