AUAB தலைவர்கள் –
அமைச்சர் மனோஜ் சின்ஹா சந்திப்பு
மத்திய
தொலை தொடர்பு அமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்களை BSNL அனைத்து சங்க கூட்டமைப்பின்
தலைவர்கள் இன்று 01.08.2018 டெல்லியில் பாராளுமன்ற அலுவலகத்தில் சந்தித்தனர். கேரள
மாநில பாராளுமன்ற உறுப்பினர் திரு. M.B.ராஜேஷ் அவர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்.
அமைச்சருடனான கலந்துரையாடலின் போதும் அவர் உடனிருந்தார்.
தோழர்
P.அபிமன்யு GS BSNLEU , தோழர் K.S.சேஷாத்ரி
Dy.GS NFTE , தோழர் K.செபாஸ்டின் GS SNEA
, தோழர் பிரகலாத் ராய் GS AIBSNLEA, தோழர் ரவி ஷில் வர்மா GS AIGETOA , தோழர் சுரேஷ்
குமார் GS BSNLMS , தோழர் S.D.சர்மா GS ATMBSNL மற்றும் தோழர் J.விஜயகுமார் Dy.GS
TEPU ஆகிய AUAB தலைவர்கள் இன்றைய
கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
24.02.2018 அன்று
AUAB தலைவர்களிடம் தொலைத்தொடர்பு
அமைச்சர் அளித்த உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமல் இருப்பது குறித்து தங்களது வருத்தத்தை
AUAB தலைவர்கள் தெரிவித்தனர்.
மேலும் கடந்த ஐந்து மாதங்களில் அளிக்கப்பட்ட உறுதிமொழிகளை நிறைவேற்றுவது சம்பந்தமாக
தொலைத்தொடர்பு அமைச்சரோடோ அல்லது தொலைத்தொடர்பு இலாகா செயலரோடோ ஒரு கூட்டத்திற்கும்
இதுவரை ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
1.
3வது ஊதியமாற்றம் சம்பந்தமான கொடுதிறன் சரத்திலிருந்து ( Affordability Clause) BSNL
நிறுவனத்துக்கு விலக்கு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்திருந்தார்.
இருந்த போதிலும், DOT இலாகா 3வது ஊதிய மாற்றத்திற்காக
கொடுதிறன் சரத்திலிருந்து விலக்கு பெறுவதற்கான அமைச்சரைவை குறிப்பை தயாரிக்கும் நடவடிக்கையில்
இதுவரை ஈடுபடவில்லை.
2.
அரசு விதிகளின்படி BSNL நிறுவனத்திடமிருந்து ஊதிய இறுதிநிலைக்கு மாறாக உண்மையான அடிப்படைச்சம்பளத்தின்
அடிப்படையில் ஓய்வூதிய பங்களிப்பு பெற நடவடிக்கை எடுக்க வழிகாட்டுதல் வழங்கப்படும்
என அமைச்சரும் , DOT செயலரும் வாக்குறுதியளித்தனர். ஆனால் இவ்விவகாரம் குறித்து DOT
இலாகா இன்றைய தேதிவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
3.
BSNL ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதிய மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்க தொலைத்தொடர்பு
அமைச்சர் DOT செயலருக்கு 24.04.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில் ஆணையிட்டார். ஆனால்
இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
4.
BSNL நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்படும் என உறுதியளித்தார். ஆனால் இதுவரை
ஒதுக்கப்படவில்லை.
மேற்கண்ட
விசயங்களை கலந்தாலோசித்த பின்பு, 4G அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் அரசின் கையில் உள்ளதாகவும்
, விரைவில் வழங்கப்படும் எனவும், ஊதியமாற்றம் , ஓய்வூதிய மாற்றம் , உண்மையான அடிப்படைச்சம்பளத்தின்
அடிப்படையிலான ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவை குறித்து 03.08.2018 அன்று DOT செயலருடன்
விவாதிக்கப்படும் என தொலைத்தொடர்பு அமைச்சர் தெரிவித்தார்.
மேலும்,
ஊழியர்கள் கோரிக்கை எழுப்பும் அதே சமயத்தில் BSNLன் வருவாயையும் உயர்த்த வேண்டுமென
அமைச்சர் தெரிவித்தார். ஏப்பமிடும் விலையின் அடிப்படையில் சேவை வழங்கும் ஜியோ நிறுவனத்துக்கு
நாங்கள் கடும் சவாலாக செயல்படுகிறோம் எனது AUAB தலைவர்கள் தெரிவித்தனர். கேரள மாநில பாராளுமன்ற உறுப்பினர் திரு.
M.B.ராஜேஷ் அவர்கள் கூட்டத்திற்கு அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு அமைச்சருக்கு தனது
நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
கூட்டத்திற்கு
அனுமதி வழங்கிய தொலைத்தொடர்பு அமைச்சருக்கும் , கூட்டத்திற்கு ஏற்பாடு செய்த பாராளுமன்ற
உறுப்பினர் திரு. M.B.ராஜேஷ் அவர்களுக்கும் AUAB தலைவர்கள் தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டனர்.