31 July 2018


தமிழ்மாநிலச் சங்கத்தின் 
ஊதியக்குழு பரிந்துரைகள்

தமிழ்மாநிலச் சங்கத்தின் ஊதியக்குழு கூட்டம் 30.07.2018 அன்று நடைபெற்றது. மாநிலச்சங்க நிர்வாகிகள் , மாவட்டச்செயலர்கள் கலந்து கொண்டனர். தோழர் பட்டாபி அவர்கள் கூட்டத்தை வழிநடத்தினார். நமது கூட்டணிச்சங்கங்களின் சார்பில் TEPU , SEWA சங்க பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 
கூட்டத்தில் கீழ்க்கண்ட பரிந்துரைகளை மத்திய சங்கத்திற்கு கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது.
  • 01.01.2017 முதல் பணப்பலனுடன் கூடிய ஊதியமாற்றம்

  • அதிகாரிகளுக்கு சற்றும் குறையாத 15% ஊதிய நிர்ணயம்

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையில் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9000/- ஆக திருத்தியமைக்கப்பட்டதைப் போன்று குறைந்தபட்ச ஊதிய விகியமான NE-1 என்பது 18000 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டும். அப்போதுதான் 01.01.2016 முதலான DOP&T உத்தரவின்படி நடப்பில் உள்ள 1 முதல் 6 வரையான ஊதிய விகிதங்களில் உள்ள ஓய்வூதியர்கள் குறைந்தபட்ச ஓய்வூதியத்தினை மாற்றியமைத்தன் பலனைப் பெறமுடியும்.

தேக்கநிலையை கலைவதற்கு நமது குழு புதிய இறுதி ஊதிய விகிதத்தினை பெற அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய இறுதி நிலை ஊதிய விகிதத்தை அனைத்து ஊதிய ஊதிய விகிதங்களுக்கும் பெற ( நடப்பு இறுதி ஊதிய விகிதம்+119.5% IDA+*15%ஊதிய நிர்ணயம்+ எட்டு எதிர்கால இன்கிரிமென்ட்(26%) என கணக்கிட வேண்டும். இதன் மூலம் அடுத்த ஊதிய திருத்தம் அமுலாகும் வரை ஊதிய தேக்க நிலை ஏற்படாமல் தடுக்கமுடியும்.
  • ஊதிய விகிதம் NE-1 மற்றும் NE-2 ஆகியவை ஒன்றிணைக்கப்பட்டு ஊதிய விகிதம் NE-3ஐ ஆரம்ப ஊதிய விகிதமாக அமைத்தால் Gr’D தோழர்களின் தேக்க நிலையை கலைய முடியும்.

  • ஊதிய விகிதம் NE-8ஐ ஊதியவிகிதம் NE-9உடன் இணைப்பதன் மூலம் பதவி உயர்வுக் கொள்கையின் படி ரூ7100/-லிருந்து குறைக்கப்பட்டு தேக்கநிலையில் உள்ள அநேக தோழர்களை பாதுகாக்கமுடியும்.

  • நடப்பில் உள்ள 12 ஊதிய விகிதங்களுக்குப் பதிலாக 9 ஊதிய விகிதங்களே போதுமானது.

அலவன்சுகள் திருத்தம் குறித்து தற்போதைய நிகழ்ச்சி நிரலில் இல்லாமல் இருக்கலாம், அதற்காக அலவன்சுகளை உயர்த்துவது குறித்து குரல் எழுப்பாமல் இருக்க முடியாது. 3 அல்லது நான்கு அலவன்சுகளை உயர்த்திப் பெறுவதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

  • மாற்றுத்திறனாளிகளுக்கான படி

  • டெலிபோன் பழுதுகளை  சரிசெய்வதை ஊக்குவிக்க பெட்ரோல் அலவன்ஸ் போல சைக்கிள் பராமரிப்பு படியையும் உயர்த்த வேண்டும்.

  • போக்குவரத்துப்படி

  • மேலும் போக்குவரத்துப்படி சில அலவன்சுகளை விலைவாசிப் புள்ளியுடன் இணைத்து அதன் அடிப்படையில் உயர்த்தி வழங்கலாம்.

ஊதியதிருத்தம் சம்பந்தமாக DPE வழிகாட்டுதலைப் பெற பிரதமர் அலுலகம் , DPE அலுவலகம் ஆகியவற்றை அனுகிய மத்திய சங்கத்தின் தனித்த முயற்சிகளை இவ்வூதியக்குழு பாராட்டுகிறது.

ஊழியர்களுக்கான DPE வழிகாட்டுதல் வெளியான பிறகு நமது சங்கம் BSNL நிர்வாகத்தினை உரிமையோடு அனுகி DOT இலாகாவின் பார்வையை நமது பக்கம் திருப்பியது. நமது சங்கத்தின் முயற்சியால் மட்டுமே ஊதியக்குழு அமைக்க ஒப்புதல் பெறப்பட்டது. ஊதிய மாற்றக் கூட்டுக்குழுவினை அமைக்க நமது சங்கம் தொடர்ந்து பாடுப்பட்டது, வெற்றியும் அடைந்தது. சென்ற ஊதிய மாற்றத்தின் போது ஊதியக் கூட்டுகுழு என்ற ஒன்று அமைக்கப்படவேயில்லை. நிர்வாக உறுப்பினர்கள் அடங்கிய குழு மட்டுமே அமைக்கப்பட்டது. BSNLEU சங்க தோழர்கள் அதில் உறுப்பினர்களாக இடம் பெறவில்லை. ஆகவே ஊதியக்குழு அமைக்கப்பட்டது நமது சங்கத்தின் மிகப்பெரும் சாதனையாகும்.

19.07.2017 அன்று ஊதிய திருத்தத்திற்கான கூட்டுக்குழுவை அமைக்க நிர்வாக உத்தரவிட்டது. அதில் நாம் சிலவற்றை சுட்டிக் காட்ட விரும்புகிறோம். ஊதியக்குழு அமைக்கப்பட்டது ஆனால் ஊதியக்குழுக்கான வழிகாட்டுதல் ஏதும் வழங்கபடவில்லை. ஆனால் ஊதியக்குழு அமைக்கப்படதன் நோக்கமே “ ஊதிய விகிதங்களை கட்டமைக்க மட்டும்தான் “ என்பதை ஒருவரால் கடிதத்தின் வாயிலாக ஊகித்துக் கொள்ள முடியும். இது ஊதியக்குழு ஊதிய விகிதங்களை கட்டமைக்க மட்டுமே உருவானதேயன்றி ஊதிய திருத்தத்தின் சம்பந்தமான அனைத்து நடவடிகைகளிலும் இறங்க முடியாது என்பதையே காட்டுகிறது.

ஊதியக்குழுவுக்கு ஊதிய பேச்சுவார்த்தையை நடத்த அனைத்து தரப்பு அதிகாரம் உள்ளதா என்பதை அறிய தமிழ்மாநில ஊதியக்குழு விரும்புகிறது. ஊதியக்குழுவால் ஊதிய விகிதங்களை கட்டைமைப்பதைத் தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என சொல்லப்படுகிறது. இது குறித்து நிர்வாகத்தரப்பிடமிருந்து விளக்கம் பெறப்படவேண்டும்.

ஊதியக்குழு 20.07.2018 அன்று கூடியபோது. விவாதங்களின் போது ஊழியர் தரப்பு DPE இலாகாவின் 24.11.2017 வழிகாட்டுதலில் பாரா-2(III) என சரியாக தனது ஆட்சேபனையை எழுப்பியது. ஆனால் நிகழ்ச்சிக் குறிப்பில் பாரா-3 என பதிவு செய்யப்பட்டுவிட்டது. நிகழ்ச்சிக் குறிப்புகள் தவறானது. நமது சங்கம் அதை திருத்த வேண்டும் எனவும் எதிர்காலத்தில் நிகழ்ச்சிக் குறிப்புகள்  ஊழியர் தரப்பு வசம் காண்பிக்கப்பட்டு தவறுகள் இல்லாமல் வெளியிடப்படவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.
 
மேற்படி நிகழ்ச்சி குறிப்பில் பாரா-4 என்பது DPE OM dated Para2 (VI) எனசரியாக பதிவு செய்யப்பட்டது. ஆனால பாரா-2(III) விசயத்தில் இது நடக்கவில்லை.

Para2 (VI) விசயத்தில் கீழ்க்கண்ட விசயங்களை இணைக்கிறோம்.

  • தமிழக ஊதியக்கமிட்டி கருதுவது என்னவெனில் DPE OM dated 24/11/2017 para2(1)ல் சொல்லப்பட்ட “ கொடுதிறன் மற்றும் நிதிநிலை பேணும் திறன் ஆகியவை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் “ என்பது குறித்து மத்திய சங்கம் குரல் எழுப்பவேண்டும்.

  1. கடந்த ஊதியக்குழு போனஸ் குறித்து விவாதித்தது. போனஸ் கோரிக்கையும் தற்போது எழுப்பப்பட்டு அரசு முடிவின் படி குறைந்த பட்ச போனஸ் பெறப்பட வேண்டும்.

  • அதிகாரிகளுக்கான பதவி உயர்வு கொள்கையில் 5வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்கப்படுவது போல் ஊழியர்களுக்கான பதவி உயர்வுக் கொள்கையிலும் 5வருடங்களுக்கு ஒரு முறை என அனைத்து பதவி உயர்வுகளும் வழங்கப்பட வேண்டும். ( நமது குறிப்பு : பதவி உயர்வுக் கொள்கையின் படி 5 வருடமோ எட்டு வருடமோ கழித்து தான் பலன் பெறுகிறோம் அதுவும் வெரும் 3 சதவித இன்கிரிமென்ட் மட்டுமே. அதை பதவி உயர்வு திட்டத்தின் அடிப்படையில் பெறும் பதவி உயர்வின் போது அளிக்கப்படும் பலன் வழக்கமான 3% இன்கிரிமென்ட்டுக்கும் கூடுதலாக 5% அல்லது 6% என கூடுதலாக தனியாக நிர்ணயித்து ஊதிய விகிதத்தை நிர்ணயிக்கலாம் )

  • முறைப்படுத்தப்பட்ட பஞ்சப்படி அடிப்படையிலான ஊதிய நிர்ணயம் என்பது 5வருடங்களுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் பெறுபவர்களுக்கானது நம்மைப் போன்று 1 0 வருடங்களுக்கு ஒரு முறை பெறுபவர்களுக்கு அல்ல.