ஊதிய மாற்ற கூட்டுக் குழுவின் 6வது கூட்டம்
ஊதிய மாற்ற கூட்டுக்குழு 6வது முறையாக இன்று 28.09.2018 அன்று கூடியது.
இன்றைய கூட்டத்தில் ஊழியர் தரப்பு சார்பாக , ஊதிய நிலைகளில் தேக்க நிலையைத் தவிர்ப்பதற்காக NE-4 மற்றும் NE-5 ஊதிய விகிதங்களில் ஒரு ஆண்டு உயர்வுத் தொகையை கூடுதலாக வழங்கி அதன் இறுதிநிலை ஊதியத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.
நிர்வாக தரப்பும் இக்கோரிக்கையை பரிசீலிக்க ஒப்புக்கொண்டது.
ஊதிய மாற்ற கூட்டுக் குழு மீண்டும் 09.10.2018 அன்று கூடவுள்ளது.
அடுத்த கூட்டத்தில் படிகள் திருத்தம் பற்றி விவாதிக்கப்படும்.