சமிபத்திய செய்திகள்...
BSNL நிதியாதாரத்தை மேம்படுத்துவதற்கான
Now BSNL at your Door Step என்ற
புதிய கோசத்துடன் அறிவிக்கப்பட்ட திட்டம் நமது நிறுவனத்தின்
விளம்பர தூதரும் , குத்துச்சண்டை வீராங்கனையுமான திருமதி மேரி கோம்
, MP Rajya Sabha அவர்களால்
24.09.2018 அன்று BSNL கார்ப்பரேட்
அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முறைப்படி துவக்கி வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில்
நமது நிறுவனத்தின் Shri Anupam
Srivastava CMD, BSNL, Smt. Sujata ‘T’ Ray, Dirctor (HR & Finance), Shri
N.K. Mehta, Director (EB) மற்றும்
உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொழிற்ச்சங்கத்
தலைவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர் . நமது சங்கத்தின் சார்பாக
தோழர் Com. Chandeshwar
Singh, G.S. and Com. K.S. Sheshadri, Dy. G.S. and Com. A. Rajamouli, Treasurer ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டனர்.
நாடு
முழுவதும் இத்திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் என தொழிற்சங்கத் தலைவர்கள் உறுதியளித்தனர். ஊழியர்கள் அனைவரும் வாரத்தின் ஒரு நாள் மார்க்கெட்டிங்
பணிகளில் ஈடுபட கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மாநில
, மாவட்ட மையங்களில் தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு இத்திட்டத்தின் செயல்பாடு கண்கானிக்க மற்றும் மேம்படுத்தப்படும்.
தனி
டவர் நிறுவனத்துக்கெதிராக BSNL அனைத்து
சங்கம் சார்பாக தொடரப்பட்ட வழக்கு
25.09.2018 அன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில்
விசாரனைக்கு வந்தது. அன்றைய தினம்
நேரமின்மை காரணமாக வழக்கின் விசாரனை
தள்ளி வைக்கப்பட்டது. வழக்கு மீண்டும் 31.01.2019 அன்று
மீண்டும் விசாரனைக்கு வரவுள்ளது.
தேசிய
டிஜிட்டல் தொலை தொடர்புக் கொள்கை
2018க்கு மத்திய அமைச்சரவை 26.09.2018 அன்று ஒப்புதல்
வழங்கியுள்ளது. மேலும் டெலிகாம் கமிசன்
“ Digital Communications Commission “ என
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மற்றும்
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான TRAI - DIGITAL COMMUNICATIONS
REGULATORY AUTHORITY OF INDIA (DCRAI) என
பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.