28 September 2018


JTO போட்டித் தேர்வு - BSNL நிர்வாகம் ஒப்புதல்
APPROVAL FOR JTO COMPTETITIVE EXAM UNDER 50% INTERNAL QUOTA


2016-17 மற்றும் 2017-18 ஆம் ஆண்டிற்கான BSNL ஊழியர்களுக்கான 50% உள் ஒதுக்கீடு அடிப்படையிலான காலியாக உள்ள JTO  பதவிகளுக்கான போட்டித்தேர்வு நடத்திட BSNL நிர்வாகம் 26.09.2018 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

போட்டித் தேர்வு Online தேர்வாக நாடு முழுவதும் ஒரே நேரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தேர்வு நடத்துவதற்காக தமிழ்நாடு , ஆந்திரா போன்ற Territorial மாநில நிர்வாகங்களும் , STR , STP போன்ற Non – Territorial மாநில நிர்வாகங்களும் வருட வாரியான காலியிடங்களை OC/OBC , SC , ST என இனவாரியாக கணக்கிட்டு 05.10.2018க்குள் டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்திற்கு தகவல் அளிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.