தமிழ் மாநில கவுன்சில் கூட்டம்
தமிழ் மாநில கவுன்சில் கூட்டம் 09.10.2018 அன்று தலைமை பொது மேலாளர் திரு ராஜு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. கவுன்சில் கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் GM HR திரு மோகன் அவர்கள் வரவேற்று பேசினார்.
கவுன்சில் கூட்டத்தின் துவக்கத்தில் ஊழியர் தரப்பு தலைவர் தோழர் நடராஜன் மாநில நிர்வாகத்தின் முனைப்பான சேவை மேம்பாட்டை முன்னெடுக்கும் பல்வேறு செயல்களை சுட்டிக்காட்டி பாராட்டினார். 14.08.2018 CGM நடத்திய கூட்டத்தின் முடிவை சுட்டிக்காட்டி சேவை மேம்பாடு, வருவாய் பெருக்கம் ஆகியவற்றில் எப்போதும் ஊழியர் தரப்பு முன்னிற்கும் என உறுதி கூறினார்.