15 October 2018



BSNL ஊழியர்களின் பெற்றோர்கள் BSNLMRS திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதி குறித்து  கார்ப்பரேட்  அலுவலகத்தின் தெளிவுறுத்தல் ... 



BSNL ஊழியர்களின் பெற்றோர்கள் குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஓய்வூதியம் பெறும் சமயத்தில் அவர்கள் BSNLMRS திட்டத்தின் கீழ் மருத்துவ வசதியையைப் பெறமுடியாது. அதே சமயத்தில் BSNL ஊழியர்களின் பணிபுரியும் மனைவியரின் ஊதியம் எவ்வளவு இருந்தாலும் அவர்கள் தங்கள் பணிபுரியும் நிறுவனத்திடமிருந்து அவருக்கோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கோ தங்கள் நிறுவனத்தின் மருத்துவத்திட்டத்தின் கீழ் பயனடையவில்லை என்ற சான்றிதழ் பெற்று சமர்ப்பித்தால் போதுமானது. பெற்றோர்களைப் பொருத்தமட்டில் இந்த விதி குறித்து BSNLMRS திட்டத்தில் குறிப்பு ஏதுமில்லை. 

பல பொதுத்துறைகளில் ஓய்வூதியத்தை கணக்கில் எடுக்காமல் மருத்துவ வசதி என்பது ஓய்வுக்குப் பிந்தயை சலுகையாக நீட்டித்து வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு மருத்துவ வசதி பெறும் பெற்றோர்கள் BSNLMRS திட்டத்தின்படி ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களாக கருதப்படமாட்டார்கள் என கார்ப்பரேட் அலுவலகம் தனது 12/10/2018 தேதியிட்ட உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.