ஊதியமாற்ற கூட்டுக் குழு கூட்டம்
ஊதியமாற்ற கூட்டுக்குழு 7வது முறையாக இன்று 09.10.2018 அன்று கூடியது.
இன்றைய கூட்டத்தில் வீட்டுவாடகைப் படி வழங்குவது குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டது.
வீட்டுவாடகைப் படி உயர்த்தப்படமாட்டாது என ஊழியர் தரப்புக்கு தெரிவிக்கப்பட்டது.
நிர்வாகத்தின் இம்முடிவை ஊழியர்தரப்பு உறுப்பினர்கள் கடுமையாக எதிர்த்தனர்.
அதோடு மட்டுமின்றி புதிய ஊதிய விகிதத்தின் அடிப்படையில் வீட்டுவாடகைப் படி உயர்த்தி வழங்கப்பட வேண்டுமென வலியுறுத்தினர்.
நிர்வாகம் இம்முடிவை தற்போது திரும்பப் பெறுவதாகவும் இதன் மீது அடுத்த கூட்டத்தில் விவாதிக்கலாம் எனவும் கூறியது.