9 October 2018


BSNL அனைத்து சங்க போராட்டத் திட்டங்கள்

BSNL அனைத்து சங்க கூட்டமைப்பு நேற்று 08.10.2018 அன்று டெல்லியில் நமது சங்க அலுவலகத்தில் கூடியது. 24.02.2018 அன்றைய தொலைத்தொடர்பு அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அவர் அளித்த வாக்குறுதிகள் இதுவரை கண்டுகொள்ளப்படாதது குறித்து கூட்டமைப்பு தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது. நீண்ட விவாதங்களுக்குப்பிறகு கீழ்க்கண்ட போராட்ட முடிவுகள் ஏக மனதாக எடுக்கப்பட்டன.

அதன்படி;

29.10.2018 அன்று அனைத்துமட்டங்களிலும் நமது கோரிக்கைகளை மையப்படுத்தி பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்த்துவது...

30.10.2018 அன்று அனைத்துமட்டங்களிலும் தர்ணாப் போராட்டம் நடத்துவது...

14.11.2018 அன்று மாநில மாவட்ட மையங்களில் பேரணியாகச் சென்று மாநில முதன்மைப் பொதுமேலாளர் மற்றும் மாவட்ட பொதுமேலாளரிடம் கோரிக்கை மனு அளிப்பது...

கோரிக்கைகள் தீராவிடில் நமது போராட்டத்தை தீவிரப்படுத்தும் வகையில் 30.11.2018க்கு பிறகு காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொள்ள உத்தேசிப்பது...

மேலும்;

Non-BSNL Siteகளின் உட்கட்டமைப்பை பராமரிக்க தனியார் வசம் விடப்பட்டுள்ளது அதற்காக வருடத்திற்கு ரூ.1800/- கோடி வழங்குவதைக் கண்டித்தும்...

உயர்நீதிமன்றம் தில்லி தீர்ப்பின் படி DOT யால் BSNLக்கு அனுப்பப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட  ITS  அதிகாரிகள் தவிர மற்ற அதிகப்படியான ITS அதிகாரிகளை திரும்ப அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளதைக் கண்டித்தும். அனைத்து சங்கம் சார்பாக நமது நிறுவனத்தின் CMDக்கு கூட்டமைப்பின் கண்டனங்களை தெரிவித்து கடிதம் எழுதுவது.

மற்றும்;

நமது ஊதிய மாற்றக்கோரிக்கைகளான 15சத நிர்ணயத்துடனான ஊதியமாற்றம் , ஓய்வூதிய மாற்றம் , வாங்கும் ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதியப் பங்களிப்பு மற்றும் நமது நிறுவனத்திற்கு 4G அலைக்கற்றை ஒதுக்கீடு ஆகிய பொதுக்கோரிக்கைகளையும் இணைத்து அனைத்து மட்டங்களிலும் இணைந்த போராட்டங்களை நடத்துவது என கூட்டமைப்பு சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.