21 November 2018


12வது BSNL STAFF WELFARE BOARD கூட்ட முடிவுகள்



BSNL STAFF WELFARE BOARD ன் 12வது கூட்டம் டெல்லி கார்ப்பரேட் அலுவலகத்தில் 03.08.2018 அன்று நடைபெற்றது. அதன் கூட்ட குறிப்பை 19.11.2018 அன்று கார்ப்பரேட் அலுவலகம் வெளியிட்டது. அன்றைய கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.


  • Technical Scholarship வழங்குவதற்கு இனி Technical Course உடன் முதுகலை படிப்புகளும் ( Post Graduate Courses ) ஒருங்கிணைக்கப்படும்.

  • நமது ஊழியர்களின் குழந்தைகள் நமது நிறுவனத்தின் Scholarship தவிர வேறு எங்காவது Scholarship பெற்றால் அவர்களுக்கு நமது நிறுவனத்தின் BSNL STAFF WELFARE BOARDன் கீழ் வழங்கப்படும் Scholarship இனி வழங்கப்படாது.

  • ஊழியர்களின் இறப்பின் போது வழங்கப்படும் உதவித் தொகை ரூ.15000/-லிருந்து ரூ.20000/- ஆக உயர்த்தப்படுகிறது. 

  • மாநில Welfare கமிட்டிக்களுக்கான வருடாந்திர நிதி ஒதுக்கீடு (Annual Grant) ரூ.15000/- ஆக இருந்தது. தற்போது மாநிலங்களின் பரப்பளவிற்கு ஏற்ப Small , Medium , Large என வகைப்படுதப்பட்டு ரூ.15000/- , ரூ.20000/-, ரூ.25000/- என உயர்த்தி வழங்கப்படும். Welfare கமிட்டிக்களின் செயல்பாடு பரிசீலிக்கப்பட்டு இத்தொகை மேலும் உயர்த்தப்படும். BSNL சேவைகளை விளம்பரப்படுத்த இனி Welfare கமிட்டிகள் கூட்டங்கள் மற்றும் விழாக்களை நடத்தலாம். 

  • ஊழியர்களின் உடல்திறன் மற்றும் மனநல குறைபாடுள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகை A&B நகரங்களில் ஒரு குழந்தைக்கு ரூ.150/-லிருந்து ரூ.200/- ஆகவும் மற்ற நகரங்களில் ரூ.100/-லிருந்து ரூ.150/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும். இந்த உதவித் தொகையை இனி அடிமட்ட ஊழியரிலிருந்து E4 ஊதிய நிலையில் உள்ள அதிகாரிகள் வரை பெறலாம். 

  • Welfare கமிட்டி பொருளாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கஊதியம் இனி மத்திய Welfare கமிட்டி பொருளாளருக்கு ரூ.5000/- ஆகவும் , மாநில Welfare கமிட்டி பொருளாளருக்கு ரூ.4000/- ஆகவும் உயர்த்தி வழங்கப்படும்.