வேலைநிறுத்தப் போராட்டம் தள்ளிவைப்பு...
ஊதியமாற்றம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , பென்சன் மாற்றம் , ஓய்வூதிய பங்களிப்பில் அரசுவிதிகள் அமுலாக்கம் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி BSNL அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் கூட்டமைப்பு நாளை 03.12.2018 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்திருந்தன.
இந்நிலையில் போராட்டத்தை தவிர்க்க BSNL CMDயுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மீண்டும் கூட்டமைப்பின் தலைவர்கள் DOT செயலரை இன்று 02.12.2018 மாலை 4 மணிக்கு சந்தித்தனர்.
நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் மற்றும் ஓய்வூதிய பங்களிப்பில் அரசுவிதிகள் அமுலாக்கம் ஆகிய கோரிக்கைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், 3 வது சம்பள மறுபரிசீலனை பிரச்சினையில் முட்டுக்கட்டை நிலவுகிறது. இந்த பிரச்சினையின் நிலை குறித்து செயலாளர், டெலிகாம் அளித்த பதிலில் நம்பிக்கை இல்லை.
நாளை 03.12.2018 அன்று நமது இலாகா அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடைபெறவுள்ளது. அமைச்சருடனான சந்திப்பில் பயனுள்ள தீர்வு காணப்படாவிட்டால், காலவரையற்ற வேலைநிறுத்தம் 10-12-2018 அன்று 00:00 மணி முதல் தொடங்கும்.