பிஎஸ்என்எல்
வீழ்த்தப்படும் கதை!
பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல் மூன்று வகை நெருக்கடிகளுக்கு
உள்ளாக்கப்பட்டுள்ளது. புதிய மூலதன நெருக்கடி, நிதிச் சுழற்சி நெருக்கடி,
காலத்துக்கேற்ற தொழில்நுட்பக் கொள்முதல் நெருக்கடி. இந்த மூன்றிலிருந்தும் தன்னை மீட்டுக்கொள்ள
கடந்த 8 ஆண்டுகளாக பிஎஸ்என்எல் போராடிக்கொண்டிருக்கிறது.
பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனங் களுக்கு அரசாங்க உதவி கூடாது என
தனியார் தொலைத்தொடர்பு பெருநிறுவனங்கள் 2012-ல் எதிர்த்தன. அரசாங்கம் தனது
அலைவரிசையை ஏலத்தின் வழியாக மட்டுமே வழங்க வேண்டும் என்கிற உச்ச நீதிமன்ற
வழிகாட்டல் வந்த பின்னர், பொதுத்துறை நிறுவனம் தனக்கான அலைவரிசையைப் பெறுவதற்கு
ரூ.18,500 கோடியை ஒரே தவணையில் வழங்கி, தன் இருப்பைக் கரைத்துக்கொள்ள
நிர்ப்பந்திக்கப்பட்டது. அதே நேரத்தில், சில தனியார் பெருநிறுவனங்கள் தாங்கள்
அலைவரிசை உரிமம் பெறாத பகுதியிலும் உடன்பாடு ஏற்படுத்திக்கொண்டு சேவை தந்து லாபம்
சம்பாதித்துக்கொண்டன.
முன்னாள் மாநிலச் செயலர் தோழர் ஆர்.பட்டாபிராமன் அவர்களது கட்டுரை இன்று 03.12.2018 தமிழ் இந்து நாளிதழில் வெளியானது...