28 December 2018




ஊதிய மாற்றம் – மேலும் விளக்கங்கள் கோரி DOT இலாகா BSNLக்கு கடிதம்...



BSNL நிர்வாகம் 26.11.2018 அன்று DOT இலாகாவிற்கு எழுதிய கடிதத்தின் மீது DOT மேலும் விளக்கங்களை கோரி 19.12.2018 அன்று கடிதம் எழுதியுள்ளது. அதன் சாரம்சம் என்னவெனில்;

தங்களது அறிக்கையை தீராக ஆராய்ந்ததாகவும் அதன் அடிப்படையில் கீழ்க்கண்ட குறிப்புகளின் மீது தங்களது விளக்கங்களை அளிக்க வேண்டுகிறோம்.


  • BSNL அளித்துள்ள அறிக்கையில், தொடர்ந்து வருவாய் குறைந்து வரும் சூழ்நிலையில் 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்துவதினால் ஏற்படக்கூடிய கூடுதல் நிதிச்சுமையை எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறோம் என்பது தெளிவுபடுத்தப்படவில்லை.

  • அதிகமாக செலுத்திய ஓய்வூதிய பங்களிப்பை திரும்ப செலுத்துவதற்கான அரசு வழிகாட்டுதல் ஏதுமில்லாத சூழ்நிலையில் ஊழியர்களின் ஓய்வு வயதை 60லிருந்து 58ஆக குறைத்தால் ரூ.2980/- கோடி கூடுதலாக நிதி கிடைக்கும் என கற்பிதமாக கூறப்பட்டுள்ளது. எனவே நிகழ்கால மதிப்பிடுகளின் அடிப்படையில் கணக்கிட வேண்டுகிறோம்.

  • 31.03.2018 அன்று BSNL நிறுவனத்தின் கடன் சுமை 15,366 கோடியாக உள்ளது. அதனால் 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்தினால் அதன் பொருளாதார நலன் மேலும் பாதிக்கப்படும். இருப்பினும் கூடுதல் பணியாட்களுடன் BSNL தன்னை நிலைநிறுத்திக் கொண்டு போட்டியை எதிர் கொண்டு வருகிறது.

  • BSNL வருவாய்க்கான மாற்று ஆதாரமாக எதிர்கால திட்டங்களின் மூலம் ஈட்டப்போகிற வருமானத்தை கணக்கு காட்டுகிறது. BSNL உடனடி வருவாய்க்கான ஆதாரத்தை திட்டமிட வேண்டும்.

  • BSNL 2025-26ம் ஆண்டில் அதன் வருவாய் 26095 கோடியாக உயரும் என கூறியுள்ளது. அது தற்போதைய போட்டிச் சூழ்நிலையில் காலத்தை மீறிய மதிப்பீடு.

  • BSNL சமர்ப்பித்துள்ள அறிக்கை முற்றிலும் அதிகாரிகள் ஊதிய மாற்றத்திற்கான குறிப்புகள். ஊழியர்களின் ஊதிய மாற்றம் சம்பந்தமாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் நடப்பு நிலையை தெரிவிக்க வேண்டுகிறோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.