10 January 2019

செய்திகள்


  • மத்திய தொழிற்சங்க அறைகூவலை ஏற்று அரசின் தொழிலாளர் விரோத , மக்கள் விரோத ஆட்சியைக் கண்டித்து நடைபெற்ற ஜனவரி 08&09 ஆகிய நாட்களில் நடைபெற்ற பொது வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட தோழர், தோழியர்களுக்கு மாவட்டச் சங்கம் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

  • 01.01.2019 முதலான 3.2 சத பஞ்சப்படி உயர்விற்கான அமுலாக்க உத்தரவை BSNL நிர்வாகம் 08.01.2019 அன்று வெளியிட்டுள்ளது.

  • நமது தமிழ் மாநிலத்தில் செயல்பட்டு வரும் NFTCL மற்றும் TMTCLU ஆகிய ஒப்பந்த தொழிலாளர் சங்கங்களின் இணைப்புக் கூட்டம் 19.01.2019 அன்று சென்னை கிரீம்ஸ் ரோடு NFTE சங்க அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

  • 01.01.2007க்கும் 05.07.2010க்கும் இடைப்பட்ட காலத்தில் பணிநியமனம் பெற்ற தோழர்கள் அவர்களது Pre-Revised Scale லிருந்து குறைவான ஊதிய நிர்ணயத்தை பெற்று ஊதிய இழப்பை சந்தித்தார்கள். பாதிப்படைந்த TTA தோழர்களுக்கு கூடுதலாக ஒரு இன்கிரிமென்ட் வழங்கி அவர்களது குறையை நிர்வாகம் நிவர்த்தி செய்தது. இருப்பினும் TTA தோழர்கள் தவிர RM மற்றும் Sr.TOA தோழர்களின் ஊதிய இழப்பு பிரச்சினை நீடித்து வந்தது இது குறித்து நமது சங்கம் நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதித்து வந்தது. இந்நிலையில் அவர்களது பிரச்சினையை தீர்க்கும் வகையில் அவர்களுக்கு கூடுதலாக Personal Pay வழங்க நிர்வாகம் 08.01.2019 அன்று உத்தரவிட்டுள்ளது.

  • BSNL நிறுவனத்தின் புத்தாக்கம் குறித்த இடைக்கால அறிக்கையை IIM – அகமதாபாத் வெளியிட்டுள்ளது. முழு அறிக்கை " அறிக்கைகள் " பக்கத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. 

  • 2017ம் வருட காலிப்பணியிடங்களுக்கான 50% JE கேடருக்கான போட்டித்தேர்வுக்கான அறிவிப்பை நிர்வாகம் 08.01.2019 அன்று வெளியிட்டுள்ளது. தேர்வு இணைய தேர்வாக நடைபெறும்.

           தேர்வுக்கான பதிவு தொடங்கும் நாள்    –     07.02.2019
                                             பதிவு முடியும் நாள்               –      07.03.2019
                                             தேர்வு நாள்                                   –      07.04.2019
 
  • அனைத்து சங்க கூட்டமைப்பின் கூட்டம் 08.01.2019 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் போராட்ட கோரிக்கைகள் மீது அமைச்சர் அளித்த வாக்குறுதி நிறைவேறுவதில் காணப்படும் சுணக்கம் மற்றும் கோரிக்கைகள் மீதான தொடர் நடவடிக்கை குறித்து விவாதிக்கும் குழுவிற்கு போதிய பிரதிநிதித்துவம் DOT வழங்க மறுப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. பின்பு இது குறித்து DOT செயலரை சந்தித்து முறையிடுவது என தீர்மானிக்கப்பட்டது. அதன்படி அனைத்து சங்க கூட்டமைப்பின் பிரதிநிதிகள் நேற்று 09.01.2019 அன்று DOT செயலரை சந்தித்து விவாதக் குழுவில் அனைத்து சங்க கூட்டமைப்பிற்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். DOT செயலர் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க சம்மதம் தெரிவித்தார்.