12 January 2019


தொடர் நடவடிக்கைக் குழு கூட்டம்

போராட்டக் கோரிக்கைகள் மீதான தொடர் நடவடிக்கைக்காக  அமைக்கப்பட்ட குழுவின் கூட்டம் 10.01.2019 அன்று கூடியது. அனைத்து சங்க கூட்டமைப்பின் சார்பாக தோழர் சந்தேஸ்வர்சிங் , தோழர் அபிமன்யு , தோழர் செபஸ்டின் மற்றும் தோழர் பிரகலாத் ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். DOTன் சார்பாக திரு கண்டேல்வால்,Joint Secretary(Admn) , S.K.ஜெயின் , DDG(Estt.) ஆகியோர் கலந்து கொண்டனர். BSNL சார்பாக திருமதி சுஜாதா ரே , Director(HR) மற்றும் A.M.குப்தா ,GM(SR) ஆகியோரும் கலந்து கொண்டனர்.

குழுவிற்கு தலைவராக Additional Secretary அவர்களை நியமிக்க வேண்டும் என அனைத்து சங்க கூட்டமைப்பு கடுமையாக வலியுறுத்தி வந்தது. Joint Secretary தலைமையில் கூட்டம் நடைபெற்றால் முடிவு எதனையும் எட்டமுடியாது என கருதியது. கூட்டமைப்பு கருதியது சரி என நிருபிக்கப்பட்டது. Joint Secretary(Admn), DDG(Estt.) ஆகியோரால் கோரிக்கைகளான 3வது ஊதியமாற்றம் , 4G அலைக்கற்றை ஒதுக்கீடு , ஓய்வூதிய மாற்றம் மற்றும் வாங்கும் ஊதியத்தின் அடிப்படையிலான ஓய்வூதிய பங்களிப்பு ஆகியவற்றின் தற்போதைய நிலைமை குறித்த தகவல்கள் எதனையும் அவர்களால் வழங்க முடியவில்லை. அதிகாரிகள் இருவரும் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பான கருத்துக்களையே தெரிவித்தனர். கூட்டத்தில் பயனளிக்க கூடிய முடிவுகள் ஏதும் எட்டப்படவில்லை.

மேற்படி கூட்டம் நிறைவுற்ற பின் அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் திரு அன்சு பிரகாஸ் , கூடுதல் செயலர் அவர்களை சந்தித்து கூட்டம் பயனளிக்கவில்லை என்ற தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தினர். அதன் பிறகு கூடுதல் செயலருடன் கோரிக்கைகள் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.

3வது ஊதிய மாற்றம் : 

விரிவாக விவாதிக்கப்பட்டது. 3வது ஊதிய மாற்றத்தை அமுல்படுத்த DOT தயாராக உள்ளது எனவும் ஆனால் 15% ஊதிய நிர்ணயத்திற்கான் அமைச்சரவை ஒப்புதலைப்பெறுவது கடினமானது என்றும் BSNL சந்தித்துக் கொண்டிருக்கும் கடுமையான நிதி நெருக்கடியில் அத்தைகைய கூடுதல் ஊதியத்தை வழங்குவதற்கான சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார். மேலும் BSNL நிர்வாகத்துடன் தொடந்து விவாதித்து முடிவு எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.

4G அலைக்கற்றை ஒதுக்கீடு :

BSNL 4G அலைக்கற்றை ஒதுக்கீடு மீதான அமைச்சரவை ஒப்புதலை DOT சிறப்பாக செயல்பட்டு விரைவில் பெற்றுத்தரும் என நம்பிக்கையோடு தெரிவித்தார். பிப்ரவரி முதல்வாரத்தில் நடைபெறவுள்ள டெலிகாம் கமிசன் கூட்டத்தில் தேவையான முடிவுகள் எடுக்கப்பட்ட பின் ஒப்புதல் பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கும் என தெரிவித்தார்.

வாங்கும் ஊதியத்தின் அடிபடையிலான ஓய்வூதிய பங்களிப்பு :

ஓய்வூதிய பங்களிப்பு விசயத்தில் Department of Expenditure சில தகவல்களை கோரியதாகவும் அது குறித்து DOT, BSNLக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார். அதற்கு Director(HR) ஓரிரு தினங்களில் அதற்கான பதிலை BSNL தெரிவிக்கும் என தெரிவித்தார். Department of Expenditureன் ஒப்புதலைப் பெற தேவையான நடவடிக்கைகளை DOT மேற்கொள்ளும் என தெரிவித்தார்.

ஓய்வூதிய மாற்றம் :

ஓய்வூதிய திருத்த விவகாரத்தில் நிலவும் சுணக்கம் குறித்த தங்களது ஆட்சேபனையை அனைத்து சங்கத் தலைவர்கள் வெளிப்படுத்தினர் மேலும் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். அதன் பின்பு ஓய்வூதிய நிர்ணயம் குறித்து  விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் பென்சன் வழங்குவது குறித்த அரசு உத்தரவுகளை வழங்குமாறு Director(HR) அவர்களை கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தின் முடிவில் அடுத்த வாரம் மீண்டும் சந்திக்கலாம் என அனைத்து சங்கத் தலைவர்களிடம் கூடுதல் செயலாளர் தெரிவித்தார்.