16 January 2019

16.01.2019 அனைத்து சங்க கூட்டமைப்பு - CMD பேச்சுவார்த்தை 

10.01.2019அன்று நடைபெற்ற கூட்டத்தில் தொலைத்தொடர்பு இலாகாவின் கூடுதல் செயலர் 3வது ஊதியமாற்றம் குறித்து BSNL நிர்வாகத்துடன் தொடர்ந்து விவாதித்து முடிவு செய்யுமாறு கூறியிருந்தார். அவரது வழிகாட்டுதலின் படி அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் இன்று 16.01.2019 BSNL CMD யுடன் மூன்றாவது ஊதிய மாற்றம் சம்பந்தமாக விவாதித்தனர். 15% ஊதிய நிர்ணயத்துடனான மாற்றத்தை வலியுறுத்தினர்.  CMD அவர்கள் BSNL நிர்வாகம் தனது முந்தைய நிலைப்பாடான 15% ஊதிய நிர்ணயம் என்பதிலிருந்து ஒரு போதும் விலகாது என உறுதியளித்தார். பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு எந்நேரத்திலும் வெளியாகலாம் என்ற சூழ்நிலை நிலவுவதால் ஊதிய மாற்றத்தை இறுதி செய்வதற்கான காலம் குறைவாக உள்ளதாகவும் , ஊதியமாற்ற விவகாரத்தில் சாதகமான முடிவு எட்டப்படாவிடில் போராட்டத்தை மீண்டும் தொடங்குவோம் என அனைத்து சங்க கூட்டமைப்பின் தலைவர்கள் உறுதிபட தெரிவித்தனர்.

இன்றைய கூட்டத்தில் தோழர் சந்தேஸ்வர்சிங் ,GSNFTE தோழர் P.அபிமன்யு ,GS BSNLEU தோழர் K.செபஸ்டின் ,GS SNEA தோழர் பிரகலாத்ராய் , AIBSNLEA  தோழர் ரவி ஷில் வர்மா , GS AIGETOA தோழர் சுரேஷ் குமார் ,GS BSNLMS தோழர் ரேவதி பிரசாத்,AGS ATM தோழர் H.P.சிங், Dy.GS BSNLOA ஆகிய தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.