14 March 2019

BSNL ஊழியர்களுக்கு நாளைக்குள் சம்பளம் வழங்கப்படும்...

BSNL CMD அனுபம் =வஷ்தவா அறிவுப்பு...


BSNL ஊழியர்களுக்கு நாளைக்குள் சம்பளம் வழங்கப்படும் என BSNL நிறுவனத்தின் CMD அனுபம் =வஷ்தவா இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான நேரத்தில் தலையிட்ட மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் திரு மனோஷ் சின்ஹா அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார். 


வழக்கமாக மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் வருவாய் அதிகமாக இருக்கும் எனவும் 2700 கோடி ருபாய் அளவிற்கு வருவாயை எதிர்பார்க்கிறோம் எனவும் அதில் இருந்து ரூ.850/- கோடியை ஊழியர்களின் சம்பளத்திற்கு செலவிடுவோம் எனவும் கூறினார். 


ஜியோ நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அதிக வாடிக்கையாளர்களை BSNL நிறுவனம் தன்வசம் ஈர்த்துள்ளதால் வருவாய் அதிகரிக்க வழியுள்ளதாகவும், மத்திய அமைச்சர் நேரடியாக தலையிட்டு பிரச்சினையின் தீர்வு குறித்து கண்காணித்து வருவதாகவும் , தடையற்ற சேவையை தொடர்ந்து அளிப்பதை உறுதி செய்த ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். 


BSNL நிதி மூலதனத்திற்கு தொலைத்தொடர்பு இலாகா உதவி செய்ய உள்ளதாகவும் , வங்கிக் கடன் பெறுவதற்கான அனுமதிக்கடித்தை புதன்கிழமையே வழங்கி விட்டதாகவும் தெரிவித்தார். இதன் மூலம் ரூ.3500/-கோடி அளவிற்கு வங்கி கடன் பெற முடியும் என அவர் தெரிவித்துள்ளார். 


தொலைத்தொடர்பு இலாகாவின் இவ்வுதவியால் வரும் மாதங்களில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் பிரச்சினை இருக்காது என நம்பிக்கையோடு தெரிவித்துள்ளார். டெலிகாம் துறையில் உள்ள பொதுத்துறை நிறுவனங்களான BSNL மற்றும் MTNL நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பிப்ரவரி’2019 சம்பளம் வழங்குவதில் பிரச்சனையை சந்தித்தன என்பது இவ்விடம் குறிப்பிடத் தகுந்தது. 


மேலும் ஊழியர் ஒருவர் தெரிவித்தது என்னவெனில் MTNL நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகையான ரூ.171/- கோடியை DOT விடுவித்தன் மூலம் MTNL நிறுவனத்தின் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத ஊதியம் வழங்கப்படவுள்ளதாகவும், BSNL நிறுவனத்தில் 1.76 லட்சம் ஊழியர்களும் , MTNL நிறுவனத்தில் 22000 ஊழியர்களும் பணியாற்றுவதாகவும் இதில் 16000 MTNL ஊழியர்களும், 50 சதவிகித BSNL ஊழியர்களும் அடுத்த 5-6 வருடங்களில் ஓய்வு பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.